
மனிதனின் வாழ்கையில் சோகங்கள் வருவதுண்டு,இன்பங்கள் வருவதுண்டு,பல தர பட்ட பிரச்சனைகள் வருவதுண்டு.இப்படி பட்ட பல சூழ்நிலையில் மனிதன் சுழன்று கொண்டு இருக்கின்றான் என்பது தான் உண்மை.ஆனால் இவையனைத்தும் தாண்டி,அனைத்து விசயங்களுக்கும் சிரித்து பழகியவன் தான் வாழ்கையில் சாதிக்க முடியும்.
எதிரியை பார்த்து சிரித்து பார்,அவன் பகையை மறந்து விடுவான்.நண்பனை பார்த்து சிரித்து பார்,அவன் நட்பு மீண்டும் அதிகரிக்கும்.ஆனால் தனிமையில் மட்டும் சிரிக்காதே,உன்னை பைத்தியம் என்றே ஒதுக்கி விடுவார்கள்.
சிரித்து வாழ வேண்டும் என்பதை திரைபடங்களில் கூட பல முறை சுட்டி காட்டி இருக்கிறார்கள்.
Dr.எம்.ஜி.ஆர் அவர்கள் "சிரித்து வாழ வேண்டும்,பிறர் சிரிக்க வாழ்ந்திராதே"என்று பாடிய வரிகள் இதற்கு ஒரு எடுத்துகாட்டு.
சிரிப்பை போல் நல்ல மருந்து உலகில் இது வரை கண்டுபிடிக்கவில்லை என்பதும் உண்மை."வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்"என்ற கூற்றே இதற்க்கு சாட்சி.எப்ப்படி பார்த்தாலும் சிரித்து வாழ்ந்திட வேண்டும்,இல்லை என்றால் சிரிக்க பழக வேண்டும்.
0 comments:
Post a Comment