Sunday, August 30, 2009

சிரித்து வாழ பழகு....................


மனிதனின் வாழ்கையில் சோகங்கள் வருவதுண்டு,இன்பங்கள் வருவதுண்டு,பல தர பட்ட பிரச்சனைகள் வருவதுண்டு.இப்படி பட்ட பல சூழ்நிலையில் மனிதன் சுழன்று கொண்டு இருக்கின்றான் என்பது தான் உண்மை.ஆனால் இவையனைத்தும் தாண்டி,அனைத்து விசயங்களுக்கும் சிரித்து பழகியவன் தான் வாழ்கையில் சாதிக்க முடியும்.

எதிரியை பார்த்து சிரித்து பார்,அவன் பகையை மறந்து விடுவான்.நண்பனை பார்த்து சிரித்து பார்,அவன் நட்பு மீண்டும் அதிகரிக்கும்.ஆனால் தனிமையில் மட்டும் சிரிக்காதே,உன்னை பைத்தியம் என்றே ஒதுக்கி விடுவார்கள்.

சிரித்து வாழ வேண்டும் என்பதை திரைபடங்களில் கூட பல முறை சுட்டி காட்டி இருக்கிறார்கள்.
Dr.எம்.ஜி.ஆர் அவர்கள் "சிரித்து வாழ வேண்டும்,பிறர் சிரிக்க வாழ்ந்திராதே"என்று பாடிய வரிகள் இதற்கு ஒரு எடுத்துகாட்டு.

சிரிப்பை போல் நல்ல மருந்து உலகில் இது வரை கண்டுபிடிக்கவில்லை என்பதும் உண்மை."வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்"என்ற கூற்றே இதற்க்கு சாட்சி.எப்ப்படி பார்த்தாலும் சிரித்து வாழ்ந்திட வேண்டும்,இல்லை என்றால் சிரிக்க பழக வேண்டும்.

Saturday, August 29, 2009

என்,வலைபகுதியின் அறிமுகம்..........

நான் வலைபகுதிக்கு என்னுடைய அறிமுகத்தை காட்டி சில மாதங்களே ஆகின்றன.நான் முதலில் விரும்பி பார்க்கும் ஒரே பகுதி www.orkut.com மட்டும் தான்.அதில் எனககு கூகிள் உரையாடல் என்று சொன்னால் மிகவும் பிடித்த ஓன்று.
அப்போது தான் எனக்கு கிடைத்தது என் பக்கங்கள்
என்ற வலைபகுதி.அதனை பார்த்து எனக்கும் இதில் நுழைய வேண்டும் என்ற ஆசை வந்தது.அதன் பின்பு அந்த வலைபகுதியின் பதிவரை தொடர்பு கொண்டு பல விசயங்களை விவாதித்தேன்.அப்போது அவர் கூறிய படி நானும் செயல் பட்டு இப்போது தான் படி படியாக முன்னேறும் வைப்பு வந்து கொண்டிருகின்றது.


எனது குருவாக திகழ்பவரின் பெயர் சுரேஷ் குமார்.
இவர் தற்போது வலைசரம்
என்ற வலைபகுதியில் ஒரு வார காலமாக ஆசிரியராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.

Friday, August 28, 2009

தமிழ்நாட்டின் சிறப்பு........


இந்தியா நாட்டில் இயற்கை வழம் மிகுந்த மாநிலம் தமிழ்நாடு.சென்னை முதல் கன்னியாகுமரி வரை இயற்கையின் அழகை நாம் ரசிக்க முடிகிறது.

"என்ன வழம் இல்லை இந்த திருநாட்டில்" என்ற கூற்றிற்கு இணங்க தமிழ்நாட்டில் எந்த வழதிற்கும் குறை பாடில்லாமல் காணப்படுகிறது.

சென்னை தொழில் ரீதியில் சிறந்து காணப்படுகிறது.முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரி-இல் நெல் சாகுபடியில் சிறந்து காணப்படுகிறது.

இதற்கும் இடையில் தேவையான அழவில் விவசாயம் நடைபெறுகிறது.மக்கள் அன்றாட வாழ்கையில் உழைத்து,ரத்தம் சிந்தி விவசாயத்தை கவனித்து வருகிறார்கள்.

தமிழ்நாடை பொறுத்த வரை எந்த விதத்திலும் தலை ஓங்கி காணபடுகிறது என்பது தான் உண்மை.

Thursday, August 27, 2009

யானையின் அட்டகாசம்............


கேரளா மாநிலத்தில் ஒரு யானை தனது பாகனை அடித்து,துன்புறுத்தி அவனை கொலை செய்த காட்சியினை தத்ரூபமாக படம் பிடித்துள்ளனர்.
ஒரு கோவில் விழாவில் பங்கேற்பதற்காக வந்த யானை திடீரென்று மதம் பிடித்து,அங்கு திரழாக நின்று கொண்டிருந்த மக்களை அலறி அடித்து ஓட செய்து,தனது பாகனை கொலையும் செய்தது.இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது போன்று சம்பவம் கேரளாவில் பல முறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த காட்சியினை மட்டும் தான் ஒருவர் தன் வீடியோ கேமரா மூலமாக பதிவு செய்து அதை வெளியிட்டுள்ளார்.அதனை நானும் உங்களுக்காக என்னுடைய வலைபகுதியில் பதிவு செய்துள்ளேன்.நீங்களும் அந்த கோர சமத்துவத்தை பாருங்கள்.

Thursday, August 20, 2009

விழிதெழு இளைஞர் இயக்கம்இது மும்பையில் இளைஞர்களை கொண்டு துவங்கப்பட்டுள்ள இயக்கம். இவ்வியக்கத்தின் நோக்கம்:- இளைஞர்களை சமூக நற்பணிகளில் ஈடுபடுத்தி சமூக அக்கறை வரவழைப்பது. வீணாக சீரழிந்து போகும் இளைஞர்களின் ஆற்றலை ஒன்றுதிரட்டி சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பை மேற்கொள்வது.
மும்பையில் விழித்தெழு இயக்கத்தின் தோழர்களின் கடும் முயற்சியாலும், உண்மையான அரசியல் கலக்காத தமிழ் இன உணர்வாலும், சாதி மதம் கடந்து ஒட்டு மொத்த தமிழினமும் கலந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தாலும், மக்களின் உள்ளத்தில் உள்ள விருப்பத்தை சரியாக புரிந்து கொண்டதாலும் தோழர்கள் தமிழர்களை தமிழ்ச்சாதி என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர்.அறிவிப்பு வெளியான உடனேயே, மக்களின் ஆதரவும்,எதிர்பார்ப்பும், தொலைபேசி வாயிலாகவும்,நேரடியாகவும் தெரிவிக்கப்பட்டது. பல தொண்டு நிறுவனங்களும், தன்னலம் கருதாத சமூக ஆர்வலர்களும் தங்களுடைய பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் நீர் விநியோகம், மோர் விநியோகம் போன்ற உதவிகளை செய்வதாக கூறினர். தோழர்களும் தமிழர்களின் ஒருங்கிணைப்பு கருதி ஒப்புக் கொண்டனர். முன்னேற்பாடாக தோழர்கள் குறுஞ்செய்தி வாயிலாகவும், இணையம் வாயிலாகவும் விளம்பரம் செய்தனர். தன்னலமற்ற தமிழின உணர்வாளர்கள் தானாகவே முன்வந்து தங்கள் ஆதரவை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தும், விளம்பர பதாகைகளில் விளம்பரம் செய்தும், போராட்ட ஏற்பாடு உதவி என தங்கள் ஆதரவை பதிவு செய்திருந்தனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting