Thursday, August 20, 2009

விழிதெழு இளைஞர் இயக்கம்



இது மும்பையில் இளைஞர்களை கொண்டு துவங்கப்பட்டுள்ள இயக்கம். இவ்வியக்கத்தின் நோக்கம்:- இளைஞர்களை சமூக நற்பணிகளில் ஈடுபடுத்தி சமூக அக்கறை வரவழைப்பது. வீணாக சீரழிந்து போகும் இளைஞர்களின் ஆற்றலை ஒன்றுதிரட்டி சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பை மேற்கொள்வது.
மும்பையில் விழித்தெழு இயக்கத்தின் தோழர்களின் கடும் முயற்சியாலும், உண்மையான அரசியல் கலக்காத தமிழ் இன உணர்வாலும், சாதி மதம் கடந்து ஒட்டு மொத்த தமிழினமும் கலந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தாலும், மக்களின் உள்ளத்தில் உள்ள விருப்பத்தை சரியாக புரிந்து கொண்டதாலும் தோழர்கள் தமிழர்களை தமிழ்ச்சாதி என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர்.அறிவிப்பு வெளியான உடனேயே, மக்களின் ஆதரவும்,எதிர்பார்ப்பும், தொலைபேசி வாயிலாகவும்,நேரடியாகவும் தெரிவிக்கப்பட்டது. பல தொண்டு நிறுவனங்களும், தன்னலம் கருதாத சமூக ஆர்வலர்களும் தங்களுடைய பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் நீர் விநியோகம், மோர் விநியோகம் போன்ற உதவிகளை செய்வதாக கூறினர். தோழர்களும் தமிழர்களின் ஒருங்கிணைப்பு கருதி ஒப்புக் கொண்டனர். முன்னேற்பாடாக தோழர்கள் குறுஞ்செய்தி வாயிலாகவும், இணையம் வாயிலாகவும் விளம்பரம் செய்தனர். தன்னலமற்ற தமிழின உணர்வாளர்கள் தானாகவே முன்வந்து தங்கள் ஆதரவை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தும், விளம்பர பதாகைகளில் விளம்பரம் செய்தும், போராட்ட ஏற்பாடு உதவி என தங்கள் ஆதரவை பதிவு செய்திருந்தனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting