Thursday, December 10, 2009

பயர்பாக்ஸை அழகு படுத்த வேண்டுமா???


அழகு என்றால் இயற்கை என்பது தான் பலர் கருத்து. ஆனால்,அழகைபெருக்குவது நம் கையில் தான்இருக்கிறது.எப்படியென்றால்,பிளாக்கை எடுத்து கொண்டால்,துவக்கத்தில்பொதுவான தீம் தான் இருக்கும்.
ஆனால் அதையே நாம் மாற்றி,அழகை பெருக்குவதற்காக புதிய டெம்ப்ளேட்டுகள் தரமிறக்கி அழகு படுத்தி பார்க்கிறோம்.


இப்படி எல்லாம் அழகு பார்க்க நினைக்கும் நாம் ஏன் இனி பயர்பாக்ஸை அழகுபடுத்த கூடாது?

அப்படி நீங்கள் அழகு படுத்த விரும்பினால் இந்த இணையத்தளத்தில் சென்று நீங்கள் தீம்களை தரவிறக்கி கொள்ளுங்கள்.

மேலும் தீம்களை தரவிறக்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-களை சொடுக்குங்கள்.


1.இங்கே சொடுக்கவும்

2.இங்கே சொடுக்கவும்
நீங்கள் தீம்களை தரவிறக்கி கொண்ட பின்னர்,


tools மெனுவில் சென்று add-ons -->> themes சென்று நீங்கள் விரும்பிய தீம்களை செலக்ட் செய்து அழகு படுத்தலாம்.

Tuesday, December 8, 2009

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 -ஒரு அலசல்...


விஜய் டிவி தனது ஒவ்வொரு படைப்பையும்,அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணமாகவே எடுத்து வருகிறது.

கனா காலங்கள்,அசத்த போவது யாரு,யாரு மனசுல யாரு,நடந்தது என்ன, போன்ற பல படைப்புகள் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் நிகழ்ச்சிகள்.


அந்த வரிசையில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சிறந்து விழங்கி வருகிறது.இந்த நிகழ்ச்சியானது மூன்று முறை வெற்றிகரமாக மக்கள் மனதில் இடம் பிடித்தது,தற்போது நான்காவது முறையாக ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 என்ற பெயரில் மக்களின் பார்வைக்கு வந்து கொண்டு இருக்கிறது.


ஒரு முறை பார்த்தவரை மறுபடியும் பார்க்க தூண்டும் ஈர்ப்பு சக்தி நிறைந்த நிகழ்ச்சியாக இது திகழ்ந்து வருகிறது.இசை ஞானம் இருந்தால் தான் இந்த நிகழ்ச்சியினை பார்க்க முடியும் என்று சிலர் பார்பதில்லை,ஆனால் இந்த நிகழ்ச்சியை பொறுத்த வரை இசை ஞானம் தேவையில்லை,ரசிப்பு தன்மை மட்டும் இருந்தாலே போதும் அனைவருக்கும் பிடித்து விடும்.


ஏதாவது ஒரு தொலைக்காட்சி வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியை வெளியிட்டு வெற்றியை கண்டால்,அதே போல் தொடர்வதில் தமிழ்நாட்டு தொலைக்காட்சி துறையினர் இப்போது சிறந்து வருகின்றனர் என்றே தான் சொல்ல வேண்டும்.

எப்படியெனில்,

1.கலக்க போவது யாரு, சன் டிவி-யில் அசத்த போவது யாராக மாறியது,


2.ஜோடி நம்பர் 1 ,கலைஞர் டிவி-யில் மானாட மயிலாட என்று மாறியது,


இதற்கு சாட்சிகளாய் இருப்பினும்,ஏர்டெல் சூப்பர் சிங்கரும் ராஜ் டிவி-யில் வெளிவர ஆரம்பித்து விட்டது.


விஜய் தொலைகாட்சியை தவிர யாருமே,சுயமா சிந்திக்கவே மாட்டேன்கிறாங்க.

Monday, December 7, 2009

பெற்றால் தான் பிள்ளையா...


பத்மஸ்ரீ.கமல்ஹாசன் திரைப்பட துறையில் வந்து 50 வருடம் கடந்து விட்டது.அவர் பல தரப்பட்ட வேடங்களில் நடித்து, நடிப்பிற்க்கே பெருமை சேர்த்து கொடுத்தவர்.ஆனால் இவர் மக்கள் நலத்திற்க்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.சில வருடங்களிற்கு முன்பே தன்னுடைய உடல் உறுப்புகளை எல்லாம் தானம் செய்து விட்டார்.ரேடியோ ஹலோ fm,எய்ட்ஸ் தினத்தன்று ஒரு புதிய திட்டமானதை அறிமுகபடுத்தி அதை செயல் படுத்தும் நோக்கத்தில் கமல்ஹாசனை தொடர்பு கொண்டுள்ளனர்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்க பட்ட குழந்தைகளுக்கு காப்பீட்டு வசதிகள் செய்து கொடுப்பதே இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம்.


கமல்ஹாசன் நோக்கத்தை கேட்ட மறு நிமிடமே தன்னுடைய முழு ஆதரவை இதற்காக தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்.அவர் முதல் கட்டமாக 150 குழந்தைகளை தத்து எடுத்து அவர்களுக்கான முழு பொறுப்பையும் ஏற்று கொண்டார்.அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்திற்கு "பெற்றால் தான் பிள்ளையா" என்று பெயரும் சூட்டி இருக்காராம்.பின்பு இதற்கான பிரசாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.அவர் அனைவரிடமும் சொல்வதெல்லாம் "எதற்கெல்லாமோ செலவு செய்கிறோம்,ஒரு குழந்தைக்காக 750 கொடுங்கள்,அது அவர்களுடைய மருத்துவ வசதிக்காக பயன் படுத்த படும்,

ஏன்
?


" பெற்றால்
தான் பிள்ளையா"

உண்மையாகவே சொல்ல வேண்டுமென்றால் கமல்ஹாசன் ஒரு சரித்திர நாயகன் தான்.

Thursday, December 3, 2009

காதல் தரும் சோகம்காதலித்து பார் இன்பம் வரும்.......
அதையே தொடர்ந்து பார் மிக பெரிய துன்பம் வரும்................
காதல் தோல்வியை பற்றி பல இடங்களில் பார்திருப்போம்,கேட்டிருப்போம்.அது நம்மை பெரிதாக பாதிக்காது.ஆனால் நம் வாழ்க்கையிலே அது நடந்தால் நம்மை வாட்டி வசக்கி விடும் என்பது தான் உண்மை.

பெண்ணே,
நீ தான் என் உயிர் என்றேன்!
நீ தான் என் வாழ்கை என்றேன்!
நீ தான் என் சொந்தம் என்றேன்!


ஆனால் இறுதியில்........
என் தாய் தான் உயிர் என்றாய்!
என் தந்தை தான் என் வாழ்கை என்றாய்!
என் தனயன் தான் என் சொந்தம் என்றாய்!

உன் கரம் பிடிக்க நான் வழி என்னவென்றேன்............
ஆனால்,
உன்னை விட்டு பிரிய வழி சொன்னாய்.............

வீட்டார் எதிர்த்தாலும்,
உற்றார் வெறுத்தாலும்,
நான் உனக்கு தான்,என்று சொன்னது வெறும் உதடு தானோ?

கண்ணால் பேசினாய்.............ரசித்தேன்..........
கடிதத்தில் பேசினாய்.............மகிழ்ந்தேன்............
பாசம் காட்டினாய்..............உணர்ந்தேன்............


ஆனால் இப்போது...................


வெறுப்பை ஏன் கொட்டுகிறாய்??????????
நான் அழ வேண்டும் என்றா???????????

உனக்காக எத்தனையோ செய்தேன்...........


ஆனால்,


நான் அழுவதில் தான் உனக்கு இன்பம் என்றால்..........
அதையும் செய்கிறேன்,என் வாழ்நாள் முழுதும்.............

நான் உன்னை பிரிந்தாலும் உன் ஞாபகங்களுடனே வாழ்வேன் இறுதி வரை..........

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting