Friday, April 29, 2011

இன்றைய தமிழகம் ................

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார் - எதற்காக இதனை கஷ்டப்படுகிறாய்?

நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?

அவர் சிரித்த படி சொன்னார் - என்னை பார்,

1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன்.

போரடித்தால் வண்ணத் தொலைகாட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்.

உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!

உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?

முதலாமவர் சிரித்த படி கேட்டார் - நான் யார் தெரியுமா?

தமிழ் நாட்டுக் குடிமகன்

என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்

சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம்,

பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்,

குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சை இலவசம்

எதற்காக உழைக்க வேண்டும்?

நான் கேட்டேன் - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?

பலமாக சிரித்த படி உரைத்தார்,


மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்,

குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாளர் பள்ளியில்,

படிப்பு சீருடையுடன் , மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,

பாடப்புத்தகம் இலவசம்,படிப்பும் இலவசம் , பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம்,

தேவை என்றால் சைக்கிளும் இலவசம்.

பெண் பருவம் அடைந்தால் திருமண உதவி தொகை ரூபாய் 25000 இலவசம்,


1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் ,

தேவை என்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,

மகள், பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,

நான் எதற்கு உழைக்க வேண்டும்!!!

வியந்து போனேன் நான்!!!

என் உயிர் தமிழகமே எத்தனை காலம் இந்த நிலை தொடரும்?

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு ,

ஓன்று கையூட்டு , மற்றொன்று பிச்சை !!!


இதில் நீ எந்த வகை ? எதை எடுத்து கொள்வது ?

உழைக்காமல் உண்டு சோம்பேரியாகிறாய் - இலவசம் நின்று போனால் உன் நிலை !!!

உழைப்பவர் சேமிப்பை களவாட தலைபடுவாய் !!!

இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்

அமைதி பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை

இன்னும் வெகு தொலைவில் இல்லை .

தமிழா விழிதெழு - உழைத்திடு

இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு

தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!

நாளைய தமிழகம் நம் கையில் ,

உடன்பிறப்பே சிந்திப்பாயா !!!

மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!!

Monday, April 25, 2011

பிளாக்கரில் அழித்த பின்னூட்டத்தை மறைப்பது எப்படி?

                      நாம் புதிதாக பதிவுகள் வெளியிட்ட பின்பு அந்த பதிவுனுடைய வரவேற்பினை நோக்கி இருப்பது வழக்கம்...
         
                     குறிப்பாக வாக்குகளையும்,பின்னூட்டத்தையும் மிகவும் எதிர்பார்க்கிறோம்.அதற்க்கு ஏற்ற பின்னூட்டங்களும் வாக்குகளும் கிடைக்கும் போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம்,இது தான் இயற்கை...

                    அனால் மறுமொழி எழுதும் போது சிலர் வரம்புகளை மீறுவதாலும்,தவறுதலாக மறுமொழி எழுதுவதாலும்,குறிப்பிட்ட பின்னூட்டத்தை நான் அழிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ள படுகிறோம்.

                   அவ்வாறு நாம் பின்னூட்டத்தை அழிக்கும் போது,அந்த பின்னூட்டம் இருந்த இடத்தில் "This post has been removed by the author" என்ற வாசகம் காணப்படும்...

                   இந்த வாசகங்கள் இருப்பதினால் நாம் பின்னூட்டத்தை அழித்திருப்பது அனைவருக்கும் தெரிய வருகிறது.அதனால் இந்த வாசகங்களை மறைக்க எழிய வழியை கீழே பார்க்கலாம்..

   1.பிளாக்கர் கணக்கில் உள்நுழைந்து Dashboard ---> Layout ---> Edit HTML செல்ல வேண்டும்.

 2.அதில் "Expand Widjet Templates" -யை கிளிக் செய்ய வேண்டும்...

 3.Ctrl + F -யை கிளிக் செய்து கீழே கொடுக்க பட்டுள்ள நிரலை காப்பி, பேஸ்ட் செய்து, கண்டுபுடிக்க வேண்டும்...

<b:loop values='data:post.comments' var='comment'> 

  4.இவற்றை கண்டுபுடித்த பின்பு,இந்த நிரலின் கீழே ,


<b:if cond='data:comment.isDeleted'>

<b:else/>
 என்னும் நிரலை காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும்...

 5.இப்போது " <b:loop " என்னும் எழுத்துகளுக்கு மேலே,


</b:if>

என்னும்  நிரலை காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும்...

 6.இப்போது இந்த மாற்றங்களை அனைத்தையும் சேமித்து கொள்ளுங்கள்...

                         இனி நாம் எப்போது பின்னூட்டங்களை அழித்தாலும் அதில் வரும் வாசகங்கள் மறைந்து விடும்...

                        


Saturday, April 23, 2011

பிளாக்கர் டெம்ப்லேட்(Template) அழிந்து போனால் திரும்ப பெறுவதற்கான வழிகள்...

               பதிவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல்,தங்களுடைய வலைபகுதியை அழகான டெம்ப்லேட் மூலமாகவும்,விட்ஜெட்கள் மூலமாகவும் அலங்கரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்....

              ஆனால் அவ்வாறு டெம்ப்லேட் மற்றும் விட்ஜெட் சேர்க்கும் போது சில பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டி வருகிறது.சில சமயங்களில் விட்ஜெட் சேர்க்கும் போது நம்முடைய டெம்ப்லேட் அழிந்து(Corrupt) விடுகிறது...

             இந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் நம்மில் பலர் திணறி கொண்டு இருப்போம்...

           அந்த பிரச்சனையை சரி செய்வதற்காக மிகவும் எழிதான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம்.


 1.முதலில் Dashboard--->Design--->Edit HTML செல்ல வேண்டும்.

 2.அதில் Expand Widjet Template என்பதை இம்முறை கிளிக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை...

 3.Ctrl + F என டைப் செய்து கீழே உள்ள நிரலை காப்பி செய்து பேஸ்ட் செய்து கண்டுபுடிக்க வேண்டும்...

 <b:widget id='Blog1' locked='true' title='Blog Posts' type='Blog'/>

 4.இதில் " Blog1" என்று சிவந்த நிறத்தில் குறிக்க பட்ட எழுத்துக்களை மட்டும் மாற்றி  "Blog2" என டைப் செய்ய வேண்டும்.

 5. இப்போது மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்...

                         இப்போது நாம் இழந்த நம்முடைய வலைபகுதி மீண்டும் நமக்கு திரும்ப கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்...

                        நாம் முன்னர் சேமித்து வைத்திருந்த வாக்கு பட்டை மற்றும் இதர விட்ஜெட்கள் அனைத்தும் அழிந்து விடும்.அதனை மீண்டும் நாம் தரவிறக்கி கொள்ளலாம்...

                        நாம் தவறுதலாக எப்போதாவது இதே போல் பிரச்சனையில் சிக்கி கொண்டால் இந்த பதிவு முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறேன்...


                 

Friday, April 22, 2011

நம் பதிவுகளை பேஸ்புக்கில் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது எப்படி?

                                   நம்முடைய பதிவுகளை திரட்டிகளின் மூலம் பலருக்கும் அறிமுகபடுத்துகிறோம்,இப்போது பேஸ்புக் மூலமாகவும் பகிர்ந்து கொள்கிறோம் ஆனால் பேஸ்புக்கில் நாம் ஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.
                                   ஆனால் இப்போது நம்முடைய பதிவுகளை நம்முடைய வலைபகுதியில் பதிவிட்ட உடனே  பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால்,மிகவும் எழிதான முறைகளை கையாண்டால் போதும்.

1.முதலில் நம்முடைய பேஸ்புக் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

2.அதில் நம்முடைய புகைப்படத்தின் கீழ் உள்ள Notes-யை திறந்து கொள்ளுங்கள்.

3.அதில் "WRITE A NOTE" யை கிளிக் செய்யுங்கள்.

4.அந்த பக்கத்தில் ஏதாவது ஒரு வாசகத்தை எழுதி அதை "SAVE DRAFT" -கிளிக் செய்து சேமித்து கொள்ளுங்கள்.
(இந்த வாசகத்தை பின்னர் அழித்து கொள்ளலாம்)

5.வாசகங்களை சேமித்த பின்னர் கீழே "EDIT IMPORT SETTINGS"-யை கிளிக் செய்யுங்கள்.இப்போது நம்முடைய வலைப்பக்கத்தின் முகவரியை கொடுக்க வேண்டிய புதிய பக்கம் திறக்க படும்.

6.அந்த புதிய பக்கத்தில் நம்முடைய வலைப்பக்கத்தின் முகவரியை டைப் செய்து "START IMPORTING" என்பதை கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களுடைய வலைப்பக்கம் பேஸ்புக்குடன் பகிர்வு துவங்கி விடும்.

7.அடுத்த படியாக உறுதிபடுத்துவதற்காக "CONFIRM IMPORT" என்பதனை கிளிக் செய்யுங்கள்.

8.அவ்வளவுதான் இப்போது உங்களுடைய வலைப்பக்கம் பேஸ்புக்குடன் பகிர்ந்து விடும்,நம்முடைய அடுத்த பதிவுகள் நேரடியாக பேஸ்புக்கில் பகிர படும்.

நீங்களும் முயற்சித்து பாருங்கள்....
பயனுள்ளதாக இருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்.... 
 

Friday, April 1, 2011

இன்டர்நெட்! ஏமாறாமல் இருக்க பாதுகாப்பான வழிகள்!

இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

சிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.

இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.

1. முன்பணம் கட்டாதீர்கள்:

ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது, கடன் தீர்க்கப் பணம் தருகிறோம், பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம், இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, தூண்டிலிட்டு, பின்னர் அதற்கு சரி என்கையில், முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும். இதனை மிக அழகாக நியாயப்படுத்தியும் செய்தி தரப்படும்.

பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான். அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை, அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப் படுத்திவிடுவதே, நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.

2. அக்கவுண்ட் எண் தரலாமா?

மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டால், உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான்.

பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.

3. தானாக தனி நபர் தகவல் தரலாமா?

ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.

4.போலி பேஸ்புக் செய்திகள்:


பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட, உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார், நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.

5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்:


இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.

இந்த ஐந்து வழிமுறைகளையும் கையாண்டால் ஓரளவிற்கு நாம் ஏமாறுவதை நாமே தவிர்க்கலாம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting