Friday, December 31, 2010

மதவாதிகளின் அட்டகாசம் இன்னும் ஓயவில்லை...

                            எத்தனை தலைவர்கள் மாறினாலும்,எத்தனை ஜன்மம் எடுத்தாலும்,மாறாத ஒன்றாக இருக்கிறது இந்த மத பிரச்சனை.மனிதன் மாறுகிறான்,ஆனால் மதவாதிகள் என்னும் மிருகங்கள் மாறாமல் அப்படியே தான் இருக்கிறார்கள்.
                           இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாமியம் என்ற வேறுபாடு இல்லாமல் எப்போது தான் இந்த உலகம் மாறும் என்று எதிர்பார்க்கும் மக்கள்  மத்தியில்,மதவாதிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.
                           கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதியான கொற்றிகோடு என்னும் கிராமத்தில்,C.S.I தேவாலயம் அமைந்துள்ளது.இந்த திருச்சபைக்கு பல கிளை சபைகளும் உண்டு.அதில் ஒன்றான எரிச்சமாமூடுவிளை  ஆலயம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சிறிதாக கட்டி துவங்க பட்டது.நாள் போக்கில் அந்த சபையின் குடும்பத்தினர் அதிகரித்து புதிய ஆலயம்   கட்டுவதற்காக  மேற் கூரையை பிரித்தனர்.
                           அப்போது தான்  பிரச்சனை ஆரம்பித்தது.என்னவென்றால்,வேறு மத தொழுகை இடம் இருப்பதற்கு  அருகாமையில் இன்னொரு மதத்தின் தொழுகை இடத்தை அமைக்க விட மாட்டோம் என்று மதவாதிகள் தங்கள் ஆக்ரோசத்தை வெளிக்காட்டினார்கள்.இதன் விழைவாக போலீஸ் ஸ்டேசனில் வழக்கு தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

                            இப்படியாக பல ஆண்டுகள் பிரச்சனை நடந்து கொண்டிருந்தத வேளையில்,நேற்று முன்தினம் ஆலயம் கட்டுவதற்கான ஆணை கிடைத்தது.இதை அடுத்து சபை உறுப்பினர்கள் ஆலயத்தை கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.அந்த வேளையில் மதவாதிகள் எதிர்ப்பை மீண்டும் வெளிக்காட்டி,ஆலயத்தில் பணி செய்து கொண்டிருந்தவர்களை கற்களால் தாக்கினார்கள்.

                            இதனால் அந்த பகுதியில் பெரிய மத பிரச்சனை கிளம்பியது.சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து கொற்றிகோடு பகுதியில் உள்ள அனைத்து தரத்து கிறிஸ்தவர்களும் ஒருங்கிணைந்து ஆலயத்தை கட்ட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.அதன் பெயரில் மாவட்ட கலெக்டர் வந்து அப்பகுதியை முற்றுகையிட்டார்.

                            இப்படியாக பல போராட்டத்தின் மத்தியில் கலெக்டரிடம் இருந்து ஆலயம் கட்டுவதற்கான ஆணை கிடைத்தது.

                           ஆணை கிடைத்த உடன் அங்கு குவிந்திருந்த  போலீஸ் காரர்களின் பாதுகாப்பில் ஆலயம் கட்டப்பட்டது.

                          ஒரு ஆலயம் கட்டுவதற்கு இவ்வளவு  பிரச்சனையா?இது எனது ஊரில் நடந்த உண்மை.இதே போல் பல  ஊர்களில் மதவாதிகளின் அட்டகாசம் தொடர்கிறது.இவர்களுக்கு ஒரு முடிவு வந்தால் தான்,உலகில் அனைத்து மதத்தினரும் நிம்மதியாக  வாழ முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

Monday, December 13, 2010

துபாய்க்கும் சவுதிக்கும் பிரச்சனை எதனால்?

துபாயின் முக்கிய இடமான ஜுமேரியா கடலின் உள் அமைந்துள்ளது "BURG AL ARAB" ஹோட்டல்.இது பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிலேயர்களால் கட்டப்பட்டது.இது துபாயின் ராஜா ஷேய்க் முஹம்மத் பின் ரஷித் அல் மக்தூம் என்பவரின் சொந்த கட்டிடம்.

                இந்த கட்டிடத்தை தான் துபாய் அரசு மேன்மையாக போற்றி கொண்டு இருந்தது. துபாயில் உள்ள வாகனங்களில் இந்த கட்டிடத்தின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்பது தான்,அரசின் ஆணை.

              இது கடலுக்குள் அமைந்துள்ளதால் அரபு நாடான சவுதியிலிருந்து  பார்க்கும் போது துல்லியமாக தெரிகிறது.ஆனால் அங்கிருந்து பார்க்கும் போது  கிறிஸ்துவ சின்னமான சிலுவையை போல் இந்த கட்டிடம் காட்சி அழிக்கிறது.துபாய் முஸ்லிம் நாடு என்பதால் வேறு மதத்தை சுட்டி காட்டும் இந்த கட்டிடத்தை அகற்றுமாறு சவுதி அரசர் "அப்துல்லா" கேட்டு கொண்டுள்ளார்.

       
             அதற்க்கு  துபாய் அரசர் மறுப்பு தெரிவித்துள்ளார்.ஆகவே துபாயில் உள்ள வாகனங்கள் சவுதி செல்லும் போது அவர்களுடைய வாகனங்களை கொண்டு இடித்தும்,தகராறு செய்தும் வந்தார்கள்.ஏனென்றால்,துபாய் வாகனங்களில் இந்த கட்டிடத்தின் புகைப்படம் இருப்பதினால்.

           இத்தகைய பிரச்சனைகள் கிளம்பிய உடன் இந்த கட்டிடத்தின் புகைப்படத்தை உடனே நீக்குமாறு துபாய் அரசு உத்தரவு பிறப்பித்தது.இருப்பினும் இந்த கட்டிடத்தை அகற்றுவதற்கும்,வேறு இடம் வாங்குவதற்கும்,அதில் வேறு ஹோட்டல் அமைப்பதற்கும் எவ்வளவு செலவு ஆகுமோ எல்லாவற்றையும் தானே ஏற்று கொள்கிறேன் ஆனால் இந்த கட்டிடத்தை அப்புற படுத்துங்கள் என்று,சவுதி அரசர் கேட்க, துபாய் அரசரோ முடியாது என்று ஒரே வார்த்தையில் முடித்துள்ளாராம்.


           இன்னும்  இந்த பிரச்னை ஓயாமல் நடந்து கொண்டு இருக்கிறது.பிரச்சனை சுமூகமாக தீர்ந்தால் அனைவருக்கும் நல்லது.இல்லையென்றால் இதன் காரணமாக மத கலவரம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.


பணி சுமை காரணமாக புதிய பதிவுகள் இடுவதில் தாமதம் ஏற்படுகிறது.இருப்பினும் வாரம் ஒரு பதிவு போடலாம் என ஆசை படுகிறேன்.
துபாயில்  என் பயணம் தொடர உங்களுடைய வாழ்த்துக்கள் அவசியம்...
மறக்காமல் உங்கள் கருத்துகளை எழுதி செல்லுங்கள்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting