இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாமியம் என்ற வேறுபாடு இல்லாமல் எப்போது தான் இந்த உலகம் மாறும் என்று எதிர்பார்க்கும் மக்கள் மத்தியில்,மதவாதிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதியான கொற்றிகோடு என்னும் கிராமத்தில்,C.S.I தேவாலயம் அமைந்துள்ளது.இந்த திருச்சபைக்கு பல கிளை சபைகளும் உண்டு.அதில் ஒன்றான எரிச்சமாமூடுவிளை ஆலயம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சிறிதாக கட்டி துவங்க பட்டது.நாள் போக்கில் அந்த சபையின் குடும்பத்தினர் அதிகரித்து புதிய ஆலயம் கட்டுவதற்காக மேற் கூரையை பிரித்தனர்.
அப்போது தான் பிரச்சனை ஆரம்பித்தது.என்னவென்றால்,வேறு மத தொழுகை இடம் இருப்பதற்கு அருகாமையில் இன்னொரு மதத்தின் தொழுகை இடத்தை அமைக்க விட மாட்டோம் என்று மதவாதிகள் தங்கள் ஆக்ரோசத்தை வெளிக்காட்டினார்கள்.இதன் விழைவாக போலீஸ் ஸ்டேசனில் வழக்கு தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இப்படியாக பல ஆண்டுகள் பிரச்சனை நடந்து கொண்டிருந்தத வேளையில்,நேற்று முன்தினம் ஆலயம் கட்டுவதற்கான ஆணை கிடைத்தது.இதை அடுத்து சபை உறுப்பினர்கள் ஆலயத்தை கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.அந்த வேளையில் மதவாதிகள் எதிர்ப்பை மீண்டும் வெளிக்காட்டி,ஆலயத்தில் பணி செய்து கொண்டிருந்தவர்களை கற்களால் தாக்கினார்கள்.
இதனால் அந்த பகுதியில் பெரிய மத பிரச்சனை கிளம்பியது.சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து கொற்றிகோடு பகுதியில் உள்ள அனைத்து தரத்து கிறிஸ்தவர்களும் ஒருங்கிணைந்து ஆலயத்தை கட்ட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.அதன் பெயரில் மாவட்ட கலெக்டர் வந்து அப்பகுதியை முற்றுகையிட்டார்.
இப்படியாக பல போராட்டத்தின் மத்தியில் கலெக்டரிடம் இருந்து ஆலயம் கட்டுவதற்கான ஆணை கிடைத்தது.
ஆணை கிடைத்த உடன் அங்கு குவிந்திருந்த போலீஸ் காரர்களின் பாதுகாப்பில் ஆலயம் கட்டப்பட்டது.
ஒரு ஆலயம் கட்டுவதற்கு இவ்வளவு பிரச்சனையா?இது எனது ஊரில் நடந்த உண்மை.இதே போல் பல ஊர்களில் மதவாதிகளின் அட்டகாசம் தொடர்கிறது.இவர்களுக்கு ஒரு முடிவு வந்தால் தான்,உலகில் அனைத்து மதத்தினரும் நிம்மதியாக வாழ முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
5 comments:
மனிதன் மனிதனை நேசிப்பதர்க்காகவும், மனிதகுல அவலங்களை களைந்து சீர் திருத்த பாதையில் மாறுவதர்க்காகவும் கற்பிக்க பட்டதே மதம் என்னும் பெயர் .... ஆனால் இந்த சீர்திருத்த இயக்கங்கங்களே சீர் திருத்தத்தை குலைத்து விடுகின்றன ...... அதுவும் இது இந்திய மண்ணில் மட்டுமே அதிக அளவில் நடைபெறுகிறது .. இதற்கு மதத்தின் பெயரால் இருக்கும் அரசியல் அமைப்பு தான் காரணம்........... எனவே இதற்கு ஒரே தீர்வு நமது அரசாங்கத்தை அல்ல அரசியல் அமைப்பை மாற்றி அமைப்பதுதான் ................ இதற்கு ஒரே வழி அரபு நாடுகளில் (துபாய் ) போல அரசியல் கட்டமைப்பு தான் ..........
All started with Christian Popes....They killed thousands till last century....Killed so many scientists ....Stopped so many researchers...Now the other religions are started....
Jesus loves people but Christianity hates other religious people.
மதவாதம் என்பது ஒரு மதத்திற்கு மட்டுமல்ல எந்த மதத்தில் விட்டு கொடுப்பு குறைகிறதோ அங்கே மதவாதம் உருவாகிறது . இந்த பிரச்னை கவுரவ பிரச்னை ஆனது தான் கொடுமை.கட்ட விட மாட்டோம் என்ற்றவர்களிடமும் உண்மையான கடவுள் நம்பிக்கை இல்லை அதே நேரம் இங்கே கோயில் கட்ட வேண்டும் என்ற்றவர்களிடமும் கடவுள் நம்பிக்கை இல்லை இது தான் உண்மை . ஏதோ நல்ல வழியில் வேறு பிரச்சனைகள் இன்றி சுமூகமாக முடிந்தது நல்லது
May the readers know which religionists objected to the work? By any chance, is it Islamist or Hindu?
May the readers know which religionsits 'objected' to the work? Hindus or Muslims?
Post a Comment