Wednesday, August 11, 2010

பதிவர்கள் சந்திப்பு...

அன்பான பதிவுலக தோழர்கள் அனைவரும் சந்திப்பதற்கான  ஓர் அறிய வாயப்பு...

                                   சுரேஷ்குமார் என்னும் பதிவரின் திருமணம் வருகின்ற 19 -ம் தேதி (19-08-2010) அன்று நடக்க உள்ளது.இந்த திருமணமானது முட்டைகாடு C.S.I சபையில் வைத்து நடைபெறும்.முட்டைகாடு என்பது குமரி மாவட்டம்,தக்கலை அருகே உள்ளது.

                                 நம்முடைய பதிவர் குடும்பத்தில் ஒருவரான சுரேஷ் குமார் அவர்களின் திருமணத்தை, பதிவர்களாகிய நாம் தான் சிற்பிக்க வேண்டும்.பதிவர்கள்  வருவதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.தங்குவதற்கான ஏற்பாடும்,இதர வசதிகளும் செய்துள்ளோம்.

                                  அவருடைய திருமணம் முடிந்த பிற்பாடு குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவியில் வைத்து பதிவர்கள் சந்திப்பு நடைபெறும்.

                                 அந்த சந்திப்பில் பதிவுலகில் நண்பர்களாக இருக்கும் நாம் நேரில் நம்முடைய கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம்.

                                 வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்கள் நேரில் வர முடியாத காரணத்தினால் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவிக்கலாம்.

                                 சுரேஷ் குமார் அவர்களின் வலைபகுதியை பார்க்க விருப்பம் உள்ளவர்கள்,இங்கே சொடுக்குங்கள். அவர் ஏற்கனவே அழைப்பிதழை பதிவாக வெளியிட்டுள்ளார்,இந்த பதிவை பார்க்க இங்கே சொடுக்குங்கள்.

                                 மேலும் விவரத்திற்கு +919994796659 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழையுங்கள்.இது என்னுடைய தொலைபேசி எண் தான்.

                                  நானும் அவர் ஊரை சார்ந்த பதிவர் என்பதால் மட்டுமல்ல,என்னுடைய வலைபதிவின் குரு என்ற முறையிலும் தான் இந்த அழைப்பை விடுக்கிறேன்.

ஆகவே வாரீர் புதுமண தம்பதிகளை வாழ்த்தி,பதிவர் சந்திப்பை சிறப்பித்து செல்லுங்கள்...

Monday, August 9, 2010

மொபைலில் பதிவுகளை தமிழில் வாசிக்க...

                                  மொபைலில் பதிவுகளை தமிழில் வாசிக்க வேண்டுமென்றால்,மொபைலில் தமிழ் பான்ட் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.தமிழ் வசதி இல்லாத  மொபைலாக இருந்தாலும்,இப்போது தமிழில் பதிவுகளை வாசிக்கலாம்.

                                  என்னுடைய முந்தைய பதிவில் நாகப்பன் என்ற பதிவுலக நண்பர் மொபைலில் தமிழ் மூலம் எவாறு பதிவுகளை வாசிப்பது என்று பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்...அவருக்கான பதிலை இந்த பதிவில் விளக்க உள்ளேன்...

                                 முதலில் உங்களுடைய மொபைலில் இணைய நண்பனாக இருக்க வேண்டும்.அடுத்த  படியாக ஒபேரா மினி உலாவியை தரவிறக்கி கொள்ளுங்கள்...
ஒபேரா மினி தரவிறக்க உங்களுடைய மொபைலில் இருந்து http://mini.opera.com செல்லுங்கள்...

தரவிறக்கிய உடன்  ஒபேரா மினி அட்ரஸ் பாரில் (address  bar ),

opera:config 

என்று டைப் செய்து ok  பொத்தானை அழுத்துங்கள்.

இப்போது புதிதாக திறக்கும் பக்கத்தில்,

Use bitmap fonts for complex scripts  

என்ற வசதியில் NO   என்று இருந்தால்,YES என்று மாற்றி கொள்ளுங்கள்.
உணகளுடைய மாற்றங்களை சேமித்தும் கொள்ளுங்கள்...

இப்போது உலவியிலிருந்து வெளியேறி மறுபடியும் உள்நுழையுங்கள்...

அவ்வளவு தான் இப்போது உங்களுக்கு விருப்ப பட்ட பதிவுகளை உங்களுடைய மொபைலில் இருந்தே வாசிக்கலாம்...

Sunday, August 8, 2010

நம்முடைய வலைபதிவை மொபைலில் எளிதாக பார்க்க...

                                     இப்போது உள்ள காலகட்டங்களில் பல பேர் மொபைல் போன்களில் இணையத்தை பார்த்து வருகின்றனர்.மொபைல் இணையத்தின் வேகமும் இப்போது '3G' மூலமாக கூடி உள்ளது.

                                    இதன் காரணமாக தான் பலர் மொபைல் மூலமாக பிளாகரை உபயோகித்து வருகின்றனர்.ஆனால் நம்முடைய வலைபகுதி மொபைல் உதவி இல்லாமல் இருந்தால்,நாம் அனைத்து மொபைல் மூலம் பதிவுகளை வாசிக்கும் நண்பர்களையும் இழந்து விடுவோம்.

                                   ஏனென்றால் நம்முடைய தழங்களை மொபைலில் திறக்க முயற்சிக்கும் போது நேரம் அதிகமாக செலவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்,அதனால் முதலில் நம்முடைய  தழத்தை மொபைல் நண்பனாக மாற்ற வேண்டும்.

                                  அவ்வாறு மாற்ற நம்முடைய பிளாகர் கணக்கில் உள்நுழைந்து Dashboard>Design>edit html சென்று expand widjet என்பதை கிளிக் பண்ணுங்கள்.அதில் ctrl+F-ஐ அழுத்துங்கள்.

<b:include data='blog' name='all-head-content'/> 

என்னும் நிரலை அதில் காப்பி செய்து பேஸ்ட் செய்து கண்டுபுடித்து அதற்க்கு கீழே,

<meta content='IE=EmulateIE7' http-equiv='X-UA-Compatible'/> 
<b:if cond='data:blog.isMobile'> 
<meta content='width=device-width, initial-scale=1.0, user-scalable=0' name='viewport'/> 
<b:else/> 
<meta content='width=1100' name='viewport'/> 
</b:if> 

என்னும் நிரலை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்...

அவ்வளவு தான் இப்போது மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்.[save templates ]

இப்போது உங்களுடைய வலைபகுதியும் மொபைல் நண்பனாகி விடும்.இதன் மூலமாக மொபைல் மூலம் பதிவுகளை வாசிக்கும் போது மிகவும் வேகமாக இருக்கும்,அதனால் வாசகர்களும் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.

முயற்சித்து பாருங்கள் புடிதிருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்...

Wednesday, August 4, 2010

காதல் தந்த பிச்சை....

 "படத்தை கிளிக் பண்ணுங்க"
காதல் புனிது,
காதல் இனிது,
இருந்தாலும் காதல் மிக மிக கொடிது!!!

நானும் நீயும் ஓன்று என்றாய்,
நீயே என் வாழ்கை என்றாய்,
கண்ணே என்றாய்,
பொன்னே என்றாய்,

இறுதியில் நீ  யார் என்று கேட்காதது தான் மிச்சம்...


காதலை உணர்ந்தேன் உன்னால்!
அன்பை சுவாசித்தேன் உன்னால்!!

கற்றதை மறக்க செய்தாய்!
கல்வியை புகட்டினாய்!!

உற்றாரை மறக்க செய்தாய்!
புதிய உறவுகளை கொடுத்தாய்!!

ஏன்???  எதற்கு???

இதனையும் செய்தாயே ஏன்? எதற்கு??

உன்னை விரும்பிய பாவமா?

இல்லை,

உன்னை பைத்தியகார தனமாக விரும்பியதின் பலனா?

காதலிக்க அனுமதி தந்தது யார்?
உன் பெற்றோரா?
இல்லை,
உன் உற்றோரா?

இல்லையே!!!

பின்பு ஏன் திருமணதிற்கு மட்டும் அவர்கள்???

காதலிக்கும்  போது இருந்த பாசம்,
உன் திருமணத்தில்  இருக்காது...

நான் கல்லறைக்கு செல்லும் போது இருக்குமா???

நான் கல்லறைக்கு செல்லும் போது இருக்குமா???

உன்னை காதலித்ததற்கு நீ கொடுத்த பிச்சை.......
ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!!

Tuesday, August 3, 2010

அழகிய நாட்கள்...

"படத்தை கிளிக் பண்ணுங்கள்"

கடந்து வந்த நாட்கள்...
அது காணாமல் போனது!!!

கடக்கின்ற நாட்கள்...
அது நம்மை வெறுத்து திரும்பியது!!!

வரும் நாட்கள்...
அது தெரியாமல் நின்றது!!!

இப்படி இருக்கும் நாட்கள்,அழகாய் மாறுமா???

ஏன் மாறாது? ஏன் மாற்ற வேண்டும்???

நம்மை வெறுக்கும் உலகை நேசித்து பார்,
அனைவருக்கும் உதவி செய்து பார்,
எந்த காரியத்தையும் முயற்சித்து பார்,
முடியாது என்ற வார்த்தையை வெறுத்து பார்,
சுயநலத்தை வெறுத்து,பொதுநலத்தை பேணி பார்,
பிறர் மீது அன்பை செலுத்தி பார்,

ஏன் மாறாது என்ற கேள்விக்கு பதில் தெரியும்...

நேற்று,இன்று,நாளை,
அது வரும்,செல்லும்,
அதில் நம் பங்கு என்ன என்பதை சிந்திக்க வேண்டாமா???
நாளைய உலகம் நம்மை பற்றி பேச வேண்டாமா???
அனைவரும் நம்மை போற்ற வேண்டாமா???
பிறர் நம் மீதும் அன்பு செலுத்த வேண்டாமா???

இவற்றை யோசித்து பார்,
ஏன் மாறாது என்ற கேள்விக்கு விடை தெரியும்...


இருந்தோம்!!! சென்றோம்!!!
என்றில்லாமல்,

இருந்தோம்!!! சாதித்தோம்!!! சென்றோம்!!!
என்று தான் இருக்க வேண்டும்...


இதை கதையாகவோ? கவிதையாகவோ? பார்க்க வேண்டாம்...
இதில் சொல்ல பட்டிருக்கும் கருத்துகளை மட்டும் மனதில் கொள்ளுங்கள்....

என்றும் அன்புடன் ரா.ஜெரின்...

Monday, August 2, 2010

பிலாக்கரில் நம்முடைய படத்தை தலைப்பில்(favicon) கொண்டு வர வேண்டுமா???

                               தங்களுடைய வலைபகுதியில் FAVICON வைப்பதில் அனைவருக்கும் விருப்பம் இருக்கும்.ஆனால் சிலருக்கு அதற்கான வழிமுறைகள் தெரியாமல் இருப்பதினால் FAVICON வைப்பதில் சிக்கல் ஏற்படும்.

                             நிஜமாங்க,நானும் இவ்வளவு நாள் தெரியாமல் தான் இருந்தேன்.நான் அறிந்த விஷத்தை இப்போது உங்களிடமும் பகிர்ந்து கொள்ள போகிறேன்...
                           நீங்கள் FAVICON வைப்பதற்காக முதலில் உங்களுக்கு புடித்தமான படத்தினை photshop அல்லது GIMP மூலமாக திருத்தி கொள்ளுங்கள்.அந்த படத்தினை 32X32 அளவில் சேமித்து கொள்ளுங்கள்...
  • அடுத்த படியாக நீங்கள் சேமித்த படத்தினை இணைய தளத்திற்கு அனுப்பி url பெற வேண்டும்.
  • அடுத்ததாக உங்களுடைய பிளாக்கர் டாஷ்போர்ட் திறந்து கொள்ளுங்கள்.
  • அதில் design சென்று edit html சொடுக்குங்கள் இப்போது திறக்கும் பக்கத்தில் Expand Widjet -ஐ  சொடுக்குங்கள்.
  • அடுத்த படியாக ctrl + f அழுத்துங்கள். அதில் வரும் find பகுதியில்

<b:skin><![CDATA[/*  என்னும் கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.
"படத்தை கிளிக் பண்ணுங்கள்"
 <b:skin><![CDATA[/* இதற்கு மேலே,


<link href='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQiRCl1vzrgTEqGeKB-MZ227_L-I3PC9H7aomt3wHCTW89QcceDfbOiN0VMMWKEDE6cYV4RoGoBoOo8C8yTACSMyqUBuUTpOgUSy6ZlJE_M9SpZk_cgCtNcEDWNJvSZbx-5YfXyOK2xuo/s1600/rainbow.png' rel='shortcut icon'/>

என்னும்   கோடிங்கை  காப்பி செய்து பேஸ்ட் செய்து விடுங்கள்...
"படத்தை கிளிக் பண்ணுங்கள்"
  • இதில் சிவப்பு  நிறத்தில்   குறிக்க பட்டுள்ள எழுத்துகளை நீக்கி விட்டு உங்களுடைய படத்தின் URL -ஐ கொடுங்கள்.


  • இப்போது   நீங்கள் மாற்றங்களை சேமித்து கொள்ளலாம்(Save Template).


அவ்வளவு தான்  வேலை முடிந்தது....உங்களுடைய வலைபகுதியை preview செய்து பாருங்கள்.

உங்களுடைய படத்தையே தலைப்பில் கண்டு மகிழலாம்.

முயற்சி செய்து பாருங்கள்...புடிதிருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்...

Sunday, August 1, 2010

நண்பர்கள் தின சிறப்பு பதிவு...

ஆகஸ்ட் முதல் ஞாயிறு  என்றாலே அனைவருக்கும்  நாபகத்துக்கு வருவது நண்பர்கள் தினம் தான்.ஆனால் அதற்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்குதாம்.

அது என்ன  கதை என்றால்..............



1935 வது வருடம்,அமெரிக்க அரசாங்கம் ஆகஸ்ட் முதலாவது சனி கிழமை அன்று ஒரு வாலிபரை தவறுதலாக கொன்று விட்டனர்.அதற்கு அடுத்த தினமான ஞாயிற்று கிழமை அன்று அந்த வாலிபருடைய நண்பன்,தன் உயிர் நண்பனின் பிரிவை தாங்க முடியாமல் தன் உயிரையும் மாய்த்து கொண்டார்.

அந்த வாலிபருடைய ஞாபகார்த்தமாக அனைத்து வருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்று கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தது  அமெரிக்க அரசாங்கம்.நண்பர்கள் தினம்  73 வது வருடமாக இந்த ஆண்டு கொண்டாட படுகிறது.

நானும்  இந்த தினத்தில் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்து தெரிவிப்பதில்  பெருமை  கொள்கிறேன்..................

நண்பர்கள் தின வாழ்த்துகள்.....................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting