![]() |
"படத்தை கிளிக் பண்ணுங்கள்" |
கடந்து வந்த நாட்கள்...
அது காணாமல் போனது!!!
கடக்கின்ற நாட்கள்...
அது நம்மை வெறுத்து திரும்பியது!!!
வரும் நாட்கள்...
அது தெரியாமல் நின்றது!!!
இப்படி இருக்கும் நாட்கள்,அழகாய் மாறுமா???
ஏன் மாறாது? ஏன் மாற்ற வேண்டும்???
நம்மை வெறுக்கும் உலகை நேசித்து பார்,
அனைவருக்கும் உதவி செய்து பார்,
எந்த காரியத்தையும் முயற்சித்து பார்,
முடியாது என்ற வார்த்தையை வெறுத்து பார்,
சுயநலத்தை வெறுத்து,பொதுநலத்தை பேணி பார்,
பிறர் மீது அன்பை செலுத்தி பார்,
ஏன் மாறாது என்ற கேள்விக்கு பதில் தெரியும்...
நேற்று,இன்று,நாளை,
அது வரும்,செல்லும்,
அதில் நம் பங்கு என்ன என்பதை சிந்திக்க வேண்டாமா???
நாளைய உலகம் நம்மை பற்றி பேச வேண்டாமா???
அனைவரும் நம்மை போற்ற வேண்டாமா???
பிறர் நம் மீதும் அன்பு செலுத்த வேண்டாமா???
இவற்றை யோசித்து பார்,
ஏன் மாறாது என்ற கேள்விக்கு விடை தெரியும்...
இருந்தோம்!!! சென்றோம்!!!
என்றில்லாமல்,
இருந்தோம்!!! சாதித்தோம்!!! சென்றோம்!!!
என்று தான் இருக்க வேண்டும்...
இதை கதையாகவோ? கவிதையாகவோ? பார்க்க வேண்டாம்...
இதில் சொல்ல பட்டிருக்கும் கருத்துகளை மட்டும் மனதில் கொள்ளுங்கள்....
என்றும் அன்புடன் ரா.ஜெரின்...
0 comments:
Post a Comment