Sunday, May 1, 2011

கிராமம் தாழ்ந்ததும்,நகரங்கள் உயர்ந்ததுமா???

              இன்றைய தமிழகத்தில் பெரிதும் பாதிக்க பட்டுள்ள ஒரு விஷயம் என்னவென்றால், மின்வெட்டு...
            

            இந்த மின்வெட்டு காரணமாக பல தர பட்ட மக்களும் பாதிக்க பட்டுள்ளார்கள்.இதில் பெரிதும் பாதிக்க பட்டுள்ளது கிராமபுற மக்கள் தான்.

             11,300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் தமிழகத்தில் இப்போது வெறும் 10,214 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது...மின் பற்றாகுறை காரணமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டு துவங்க பட்டுள்ளது...

            இதில் மின்சாரம் அதிகமாக செலவு செய்வது நகர வாசிகள் என்று அனைவராலும் சொல்ல முடியும்,கிராமங்களில் வசிக்கின்றவர்கள் மிகவும் குறைவான மின்சாரமே உபயோகித்து வருகிறார்கள்...

           இப்படியான சூழ்நிலையில் நகரங்களில் ஒரு மணி நேரமும்,கிராமங்களில் மூன்று மணி நேரமும் மின்வெட்டு இருக்கிறது...

          ஏழைகளை காப்பாற்றுவோம்,கலங்கவிடமாடோம்,கண்ணீரை துடைப்போம் என்று அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை பேசி கொண்டிருந்தனர்...

        ஏழைகள் பலர் இருப்பது  கிராமங்களில் தான் என்பதை அந்த அரசியல்வாதிகளான குள்ளநரிகளுக்கு புரியவில்லையா  இல்லை தெரியவில்லையா???

       சொகுசாக வாழ்பவன் அங்கே சொகுசாக வாழ்கிறான்...கஷ்ட படுகிறவன் இங்கே கஷ்ட பட்டுக்கொண்டே இருக்கிறான்...இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உழைப்பவர்கள் நிலை கேள்வி குறி ஆகி விடும் என்பதில் எந்த மாற்று கருத்தும்  இல்லை....

     நகரங்களில் வாழ்பவர்கள் மட்டும் என்ன தெய்வ பிறவிகளா? அவர்களுக்கு மட்டும் உல்லாச வாழ்கையும் கிராம புற ஏழை மக்களுக்கு கொடுமையான வாழ்க்கையா???

சிந்தியுங்கள்....சிந்தியுங்கள்....

        இன்று தொழிலாளர் தினம்,ஆனால் உண்மையிலே உழைக்கும் எல்லா  தொழிலாளர்களுக்கு சமீப காலமாக எல்லா தினங்களும் துக்ககரமான நாட்களாக தான் அமைகிறது....

       மின்சாரம் என்பது உபயோக படுவது நகரங்களில் உள்ள பெரிய தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல .கிராமங்களில் பலர் செய்கின்ற வீட்டு தொழிலுக்கும் தான் தேவைபடுகிறது...

       மின்சார பற்றாகுறை என்றால் ஒத்துகொள்கிறோம்,அனால் அதை சரி செய்வதற்கு நகரத்திற்கும்,கிராமத்திற்கும் ஒரே அழவிலான மின்வெட்டை இன்று முதல் பகிருங்கள்...

              நான் சற்று ஆவேசத்துடன் இந்த தொழிலாளர் தினத்தன்று என்னுடைய பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.....அனால் இதை வாசிக்கும் நண்பர்களே சற்று சிந்தியுங்கள்....இதற்க்கு நம் பதிவர்கள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை......

                     

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting