Saturday, May 2, 2009

கருணாநிதியும்,ஜெயலலிதாவும்,இலங்கை தமிழர்களின் எதிரிகள்.

கருணாநிதியும்,ஜெயலலிதாவும்,இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.இது பற்றி விஜயகாந்த் கூறுகையில்,
இலங்கைப் பிரச்னை குறித்து ஜெயலலிதா தமிழீழம் ஒன்று தான் தீர்வு எனப் பேசி வருகிறார். அவர் இவ்வளவு நாட்கள் இதுகுறித்து மவுனமாக இருந்துவிட்டு தற்போது பேசுவது தேர்தலுக்காக தான். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்தது அங்கு தமிழர்கள் முழுவதும் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இனியும் குண்டு போட்டால் அங்குள்ள சிங்களர்கள் தான் இறந்து போவார்கள். எனவே தான், போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நடத்திய நாடகம் தான். கருணாநிதி அணிந்து வரும் மஞ்சள் துண்டு குரு பகவானைக் குறிக்கும்.

DMDK எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. மக்கள் மற்றும் ஆண்டவனோடு மட்டும் தான் கூட்டணி அமைத்துள்ளோம். லோக்சபா தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தேர்தலில் கூட்டணி அமைப்பது கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்து, பின் பங்கு போட்டுக்கொள்வதற்காக தான். மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்க விரும்பாததால் தான் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் மக்களோடு கூட் டணி வைத்து தேர்தலை . இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
'கருணாநிதிக்கு நடிக்கவும் தெரியும்': வறுமையும், ஊழலும் இரண்டற கலந்தது தான் தி.மு.க., ஆட்சி. இலங்கைப் போர் நிறுத்தம் குறித்து கருணாநிதி ஒரு நாடகத்தை காலை 6 மணிக்குத் துவங்கி 12.30 மணிக்கு முடித்துள் ளார். போர் நிறுத்திவிட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அதாவது, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக உள்ளது கருணாநிதியின் உண்ணாவிரத நாடக அரங்கேற்றம். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக இருந்தால் ரத்தக் கொதிப்பு இருப்பதைப் பார்க்க எதற்கு அங்கு டாக்டர்கள்? கருணாநிதிக்கு கதை வசனம் மட்டுமே தெரியும் என்று பார்த்தேன். ஆனால், நன்றாக நடிக்கவும் செய்கிறார்.

போர்வை போர்த்தி எட்டு ஏர் கூலர்கள் வைத்துக் கொண்டு வாடினேன், வதங்கினேன் என்றால் நியாயமா? தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் இலங்கைத் தமிழர்களை வைத்து ஏமாற்றுவேலை நடத்தி வருகின்றனர்.இலங்கைப் பிரச்னை குறித்து ஜெயலலிதா தமிழீழம் ஒன்று தான் தீர்வு எனப் பேசி வருகிறார். அவர் இவ்வளவு நாட்கள் இதுகுறித்து மவுனமாக இருந்துவிட்டு தற்போது பேசுவது தேர்தலுக்காக தான். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்தது அங்கு தமிழர்கள் முழுவதும் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இனியும் குண்டு போட்டால் அங்குள்ள சிங்களர்கள் தான் இறந்து போவார்கள். எனவே தான், போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நடத்திய நாடகம் தான். கருணாநிதி அணிந்து வரும் மஞ்சள் துண்டு குரு பகவானைக் குறிக்கும்.

DMDK Party captain rocks

நம்முடைய வருங்கால முதல்வர் கேப்டன் விஜயகாந்த் இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் போட்டி இட்டு வெற்றி காண உள்ளார்.அவர் தீய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இன்று தே.மு.தி.க தமிழகத்தில் தனி பெரும்பான்மையில் முதல் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இதற்கு காரணம் விஜயகாந்தின் கூட்டணி தான் காரணம்.கூட்டணி என்றால் மக்களுடனும் தெய்வத்துடனும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.நாளைய சமுதாயத்தின் ஒழி விழகான விஜயகாந்த் மக்களுக்காக பல நற்திட்டங்களை வகுத்துள்ளார்.அவைகள் பின்வருமாறு.

* கர்நாடகத்தில் உள்ள நீர்வளத்தைக் கொண்டே இரு மாநிலங்களின் தேவையையும் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை தே.மு.தி.க., மத்திய அரசின் மூலம் மேற்கொள்ளும்.
* கேரள மக்களின் அச்சத்தை போக்கி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி தமிழகத்துக்கு பயன்பட வழிவகை காணப்படும்.
* ஆந்திர மாநில பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க வகை செய்யப் படும்.
* கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய பாடுபடும்.
* உலகத்தில் வசிக்கும் தமிழர்களின் உரிமை பறிக்கப்படும் போது, அவர்கள் நலனுக்காக மத்திய அரசை தே.மு.தி.க., நிர்பந்திக்கும்.
* தமிழக எல்லையில் உள்ள கேரளா சொந்தம் கொண்டாடும் கண்ணகி கோவிலை, தமிழகத்துக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* தேசிய நதிநீர் இணைப்புக்கு முன்னுரிமை கொடுத்து, அதற் கான உடனடி முயற்சியில் ஈடுபடும்.
* சேது சமுத்திர திட்டத்தை மீனவர்களுடன் கலந்து பேசி, எந்த மதத்தினரும் புண்படாத வகையில் மாற்றி அமைத்து செயல்படுத்துவோம். இத்திட்டத்தில் நடந்த ஊழல் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர தே.மு.தி.க., முயற்சி எடுக்கும்.
* மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
* விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த நடவடிக்கை மற்றும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்.
* புதுச்சேரி, மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு கேப்டன் அறிக்கை விடுத்துள்ளார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting