இன்று தே.மு.தி.க தமிழகத்தில் தனி பெரும்பான்மையில் முதல் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இதற்கு காரணம் விஜயகாந்தின் கூட்டணி தான் காரணம்.கூட்டணி என்றால் மக்களுடனும் தெய்வத்துடனும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.நாளைய சமுதாயத்தின் ஒழி விழகான விஜயகாந்த் மக்களுக்காக பல நற்திட்டங்களை வகுத்துள்ளார்.அவைகள் பின்வருமாறு.
* கர்நாடகத்தில் உள்ள நீர்வளத்தைக் கொண்டே இரு மாநிலங்களின் தேவையையும் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை தே.மு.தி.க., மத்திய அரசின் மூலம் மேற்கொள்ளும்.
* கேரள மக்களின் அச்சத்தை போக்கி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி தமிழகத்துக்கு பயன்பட வழிவகை காணப்படும்.
* ஆந்திர மாநில பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க வகை செய்யப் படும்.
* கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய பாடுபடும்.
* உலகத்தில் வசிக்கும் தமிழர்களின் உரிமை பறிக்கப்படும் போது, அவர்கள் நலனுக்காக மத்திய அரசை தே.மு.தி.க., நிர்பந்திக்கும்.
* தமிழக எல்லையில் உள்ள கேரளா சொந்தம் கொண்டாடும் கண்ணகி கோவிலை, தமிழகத்துக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* தேசிய நதிநீர் இணைப்புக்கு முன்னுரிமை கொடுத்து, அதற் கான உடனடி முயற்சியில் ஈடுபடும்.
* சேது சமுத்திர திட்டத்தை மீனவர்களுடன் கலந்து பேசி, எந்த மதத்தினரும் புண்படாத வகையில் மாற்றி அமைத்து செயல்படுத்துவோம். இத்திட்டத்தில் நடந்த ஊழல் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர தே.மு.தி.க., முயற்சி எடுக்கும்.
* மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
* விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த நடவடிக்கை மற்றும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்.
* புதுச்சேரி, மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு கேப்டன் அறிக்கை விடுத்துள்ளார்.
1 comments:
Post a Comment