Wednesday, July 31, 2013

இரண்டாம் வருகை!!!!!!

              ஒரு ஆண்டுகளுக்கு முன்பு,பதிவுலகம் என்பது என் உயிராக இருந்தது,ஆனால் அதனை நல்ல முறையில் கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது ....காரணம் நேரமின்மை.....

              நேரமின்மையின் காரணமாக என்னுடைய  www.jerin.co.in என்ற என்னுடைய வலைபகுதியை இழந்து விட்டேன்....வருத்தம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் இத்தனை நாள் சென்று கொண்டிருந்தேன்.....

             இப்போது மீண்டும் பதிவுலகத்தில் நுழைவதற்கு ஒரு வாய்ப்பு  கிடைத்துள்ளது.....இந்த வாய்ப்பினை நான் தவற விடமாட்டேன்,என்ற உறுதி மொழியுடம் மீண்டும் கால் பதிக்கிறேன்....

            என்னை இவ்வளவு நாளும் ஆதரித்து,இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது பதிவுலக நண்பர்கள் நீங்கள் தான்....மீண்டும் உங்கள் ஆதரவுடம் நான் கழத்தில் இறங்குகிறேன்....

             இதனை என் இரண்டாம் வருகை என்றே நான் கருதிகிறேன்....மேலும் ஆதரவு தருவீர் என கேட்டு கொண்டு என் வருகையை பதிவு செய்கிறேன்....


                    நன்றி..... 

Friday, November 4, 2011

பேஸ்புக் கருத்து பெட்டியை பிளாக்கரில் நிறுவுவது எப்படி?

                நம்மில் அதிகமானோர் பேஸ்புக்கில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருவது உண்மை தான்.அந்த பேஸ்புக் வாயிலாக நம் பிளாகர்யையும் இணைப்பதற்கு பல வழிகள் உள்ளன.அந்த வழிகளில் ஓன்று தான் பேஸ்புக் கருத்து பெட்டி....

                இந்த கருத்து பெட்டியின் உபயோகம் என்று பார்த்தால்,நம்முடைய கருத்துகள் அனைத்தும் நேரடியாக பேஸ்புக்கில் சென்றடையும்....இதன் மூலம் நம்முடைய நண்பர்கள் அனைவரும் நம் தளத்தை வந்து பார்பதற்கு எதுவாக இருக்கும் என நம்புகிறேன்....

                இப்போது எவ்வாறு இந்த கருத்து பெட்டியை நிறுவலாம் என்று பார்க்கலாம்..

  1. முதலில் நாம் www.facebook.com/developer என்னும் தளத்தில் சென்று அதில் நமக்கென புதிய அப்ளிகேசன் துவங்க வேண்டும்...
அதற்காக "create new application" என்னும் லிங்கினை கிளிக் செய்யவும்... 2. அதில் நம்முடைய தளத்தின் பெயரை டைப் செய்யவும்... 3. பின்பு agree மற்றும் continue என்ற லிங்கினை கிளிக் செய்யவும்...


  4. Continue என்னும் லிங்கினை அழுத்திய பின்பு புதிய பக்கம் திறக்கும்....அதில் Application ID என்ற பெயரில் உங்களுக்கான ID கொடுக்க படும்.அதை குறித்து வைத்து கொள்ளுங்கள்....  5. இப்போது நீங்கள் www.blogger.com என்ற தளத்தில் நம்முடைய கணக்கை திறந்து,

               Templates--->Edit HTML--->Proceed--->Expand Widjet Template

  கிளிக் செய்து அதில் ctrl + f அழுத்தி <data:post.body/>  என்று டைப் செய்யவும்...


  6. <data:post.body/> என்பதின் கண்டுபிடித்து அதன் கீழ் 

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
  <div id='fb-root'/>
  <script>
  window.fbAsyncInit = function() {
  FB.init({appId: &#39;YOURAPPID&#39;, status: true, cookie: true,
  xfbml: true});
  };
  (function() {
  var e = document.createElement(&#39;script&#39;); e.async = true;
  e.src = document.location.protocol  +
  &#39;//href=connect.facebook.net/en_US/all.js&#39;;
  e.async = true;
  document.getElementById(&#39;fb-root&#39;).appendChild(e);
  }());
  </script>
  <fb:comments/>
  </b:if>


என்னும் நிரலை Copy  செய்து paste செய்யவும்...

  முக்கியமாக, "YOURAPPID" என்பதை மாற்றி,உங்களுடைய பேஸ்புக் அப்ளிகேசன் ID- யை டைப் செய்யவும்.


  7.  இப்போது மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்....


குறிப்பு, <data:post.body/> என்பது மூன்று  அல்லது நான்கு இடங்களில் இருக்கும்,அதில் நான்கு இடங்களிலும்,இந்த நிரலை paste செய்து பாருங்கள்....


   இப்போது உங்களுக்கான பேஸ்புக் கருத்துபெட்டி தயாராகி விடும்....

    

Friday, October 28, 2011

மலையாள திரைப்படங்களின் இன்றைய நிலை....

                     தமிழ் திரைப்படங்களை விமர்ச்சிப்பதில் வல்லுனர்கள் மலையாளிகள் என்பது எல்லோரும் அறிந்ததே...ஆனால் அப்படி பட்ட மலையாள சினிமாவில் இப்படி பட்ட ஒரு நிலைமை வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்...

                    கடந்த அக்டோபர் 26ம் தேதி கேரளத்தில் வெளி வந்த "கிருஷ்ணனும் ராதையும்" திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது...

                    இத்திரைபடத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால்,நடிப்பு,இயக்கம்,தயாரிப்பு,இசை,பாடல் வரிகள்,சண்டை பயிற்சி,கலை,பாடகர்,கதை,திரைக்கதை,வசனம்,உடைகள் போன்ற 16 பங்குகளை "சந்தோஸ் பண்டிட்" என்பவர் ஏற்றுள்ளார்.ஒரே நபர் காமெராவை தவிர மற்றுள்ள எல்லாவற்றையும் செய்து ஒரு திரைபடத்தை வெளியிட்டுள்ளார்.

                     கிருஷ்ணனும் ராதையும் திரைப்படம் கேரளா திரைப்பட உலகில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.இது வரை நடந்த அணைத்து காட்சிகளும் திரையரங்கு நிரம்பி வழிகிறது என்பது தான் இப்போதைய நிலவரம்.இந்த திரைபடத்தின் டிரைலரை(Trailer ) கீழே கொடுக்க பட்டுள்ள லிங்கில் காணலாம்...

                              "இங்கே கிளிக் செய்யுங்கள்"

                       இந்த வீடியோவை பார்த்த பின்னர் உங்களுக்கே தெரியும் இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்று?இப்படியும் ஒரு திரைபடத்தை மலையாளிகள் தினமும் சென்று பார்த்து  கொண்டு தான் இருக்கிறார்கள் என்றால் அதை போன்ற ஒரு பைத்தியகார தனம் வேறு ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.

                     இதை போன்ற திரைபடத்தை தமிழர்கள் பார்த்தால்,என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்....

                     இப்படியும் ஒரு திரைபடத்திற்கு,,,வரவேற்ப்பு கொடுக்கும் மலையாளிகளுக்கு தமிழ் சினிமாவின் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.......


இப்படி இருக்கிறது மலையாள திரைபடத்தின் இன்றைய நிலை....

Thursday, August 25, 2011

கணினியில் rundll32.exe கோப்பின் பிரச்சனைகள்...


                                           விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழை செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.

                                         rundll32.exe கோப்பு நம் கணணியில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்த கோப்பு தங்கி இருந்து மற்ற கோப்புக்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்த கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழை செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணணி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன.

                                        ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ அல்லது காம் கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல் கோப்புக்கள் இயங்காது. விண்டோஸ் சிஸ்டத்திற்கு இவற்றை இயக்க இன்னொரு கோப்பு தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe கோப்பு. 32 பிட் டி.எல்.எல் கோப்புக்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

                                         இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கணணியில் rundll32.exe என்ற கோப்பு கெட்டுப் போய் விட்டதென்று செய்தி கொடுத்து சரியான rundll32.exe கோப்பு வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும். இதில் கிளிக் செய்தால் அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் செய்திகளை பார்த்தால் சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.

Sunday, May 1, 2011

கிராமம் தாழ்ந்ததும்,நகரங்கள் உயர்ந்ததுமா???

              இன்றைய தமிழகத்தில் பெரிதும் பாதிக்க பட்டுள்ள ஒரு விஷயம் என்னவென்றால், மின்வெட்டு...
            

            இந்த மின்வெட்டு காரணமாக பல தர பட்ட மக்களும் பாதிக்க பட்டுள்ளார்கள்.இதில் பெரிதும் பாதிக்க பட்டுள்ளது கிராமபுற மக்கள் தான்.

             11,300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் தமிழகத்தில் இப்போது வெறும் 10,214 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது...மின் பற்றாகுறை காரணமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டு துவங்க பட்டுள்ளது...

            இதில் மின்சாரம் அதிகமாக செலவு செய்வது நகர வாசிகள் என்று அனைவராலும் சொல்ல முடியும்,கிராமங்களில் வசிக்கின்றவர்கள் மிகவும் குறைவான மின்சாரமே உபயோகித்து வருகிறார்கள்...

           இப்படியான சூழ்நிலையில் நகரங்களில் ஒரு மணி நேரமும்,கிராமங்களில் மூன்று மணி நேரமும் மின்வெட்டு இருக்கிறது...

          ஏழைகளை காப்பாற்றுவோம்,கலங்கவிடமாடோம்,கண்ணீரை துடைப்போம் என்று அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை பேசி கொண்டிருந்தனர்...

        ஏழைகள் பலர் இருப்பது  கிராமங்களில் தான் என்பதை அந்த அரசியல்வாதிகளான குள்ளநரிகளுக்கு புரியவில்லையா  இல்லை தெரியவில்லையா???

       சொகுசாக வாழ்பவன் அங்கே சொகுசாக வாழ்கிறான்...கஷ்ட படுகிறவன் இங்கே கஷ்ட பட்டுக்கொண்டே இருக்கிறான்...இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உழைப்பவர்கள் நிலை கேள்வி குறி ஆகி விடும் என்பதில் எந்த மாற்று கருத்தும்  இல்லை....

     நகரங்களில் வாழ்பவர்கள் மட்டும் என்ன தெய்வ பிறவிகளா? அவர்களுக்கு மட்டும் உல்லாச வாழ்கையும் கிராம புற ஏழை மக்களுக்கு கொடுமையான வாழ்க்கையா???

சிந்தியுங்கள்....சிந்தியுங்கள்....

        இன்று தொழிலாளர் தினம்,ஆனால் உண்மையிலே உழைக்கும் எல்லா  தொழிலாளர்களுக்கு சமீப காலமாக எல்லா தினங்களும் துக்ககரமான நாட்களாக தான் அமைகிறது....

       மின்சாரம் என்பது உபயோக படுவது நகரங்களில் உள்ள பெரிய தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல .கிராமங்களில் பலர் செய்கின்ற வீட்டு தொழிலுக்கும் தான் தேவைபடுகிறது...

       மின்சார பற்றாகுறை என்றால் ஒத்துகொள்கிறோம்,அனால் அதை சரி செய்வதற்கு நகரத்திற்கும்,கிராமத்திற்கும் ஒரே அழவிலான மின்வெட்டை இன்று முதல் பகிருங்கள்...

              நான் சற்று ஆவேசத்துடன் இந்த தொழிலாளர் தினத்தன்று என்னுடைய பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.....அனால் இதை வாசிக்கும் நண்பர்களே சற்று சிந்தியுங்கள்....இதற்க்கு நம் பதிவர்கள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை......

                     

Friday, April 29, 2011

இன்றைய தமிழகம் ................

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார் - எதற்காக இதனை கஷ்டப்படுகிறாய்?

நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?

அவர் சிரித்த படி சொன்னார் - என்னை பார்,

1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன்.

போரடித்தால் வண்ணத் தொலைகாட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்.

உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!

உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?

முதலாமவர் சிரித்த படி கேட்டார் - நான் யார் தெரியுமா?

தமிழ் நாட்டுக் குடிமகன்

என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்

சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம்,

பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்,

குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சை இலவசம்

எதற்காக உழைக்க வேண்டும்?

நான் கேட்டேன் - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?

பலமாக சிரித்த படி உரைத்தார்,


மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்,

குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாளர் பள்ளியில்,

படிப்பு சீருடையுடன் , மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,

பாடப்புத்தகம் இலவசம்,படிப்பும் இலவசம் , பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம்,

தேவை என்றால் சைக்கிளும் இலவசம்.

பெண் பருவம் அடைந்தால் திருமண உதவி தொகை ரூபாய் 25000 இலவசம்,


1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் ,

தேவை என்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,

மகள், பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,

நான் எதற்கு உழைக்க வேண்டும்!!!

வியந்து போனேன் நான்!!!

என் உயிர் தமிழகமே எத்தனை காலம் இந்த நிலை தொடரும்?

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு ,

ஓன்று கையூட்டு , மற்றொன்று பிச்சை !!!


இதில் நீ எந்த வகை ? எதை எடுத்து கொள்வது ?

உழைக்காமல் உண்டு சோம்பேரியாகிறாய் - இலவசம் நின்று போனால் உன் நிலை !!!

உழைப்பவர் சேமிப்பை களவாட தலைபடுவாய் !!!

இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்

அமைதி பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை

இன்னும் வெகு தொலைவில் இல்லை .

தமிழா விழிதெழு - உழைத்திடு

இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு

தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!

நாளைய தமிழகம் நம் கையில் ,

உடன்பிறப்பே சிந்திப்பாயா !!!

மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting