Monday, December 13, 2010

துபாய்க்கும் சவுதிக்கும் பிரச்சனை எதனால்?

துபாயின் முக்கிய இடமான ஜுமேரியா கடலின் உள் அமைந்துள்ளது "BURG AL ARAB" ஹோட்டல்.இது பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிலேயர்களால் கட்டப்பட்டது.இது துபாயின் ராஜா ஷேய்க் முஹம்மத் பின் ரஷித் அல் மக்தூம் என்பவரின் சொந்த கட்டிடம்.

                இந்த கட்டிடத்தை தான் துபாய் அரசு மேன்மையாக போற்றி கொண்டு இருந்தது. துபாயில் உள்ள வாகனங்களில் இந்த கட்டிடத்தின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்பது தான்,அரசின் ஆணை.

              இது கடலுக்குள் அமைந்துள்ளதால் அரபு நாடான சவுதியிலிருந்து  பார்க்கும் போது துல்லியமாக தெரிகிறது.ஆனால் அங்கிருந்து பார்க்கும் போது  கிறிஸ்துவ சின்னமான சிலுவையை போல் இந்த கட்டிடம் காட்சி அழிக்கிறது.துபாய் முஸ்லிம் நாடு என்பதால் வேறு மதத்தை சுட்டி காட்டும் இந்த கட்டிடத்தை அகற்றுமாறு சவுதி அரசர் "அப்துல்லா" கேட்டு கொண்டுள்ளார்.

       
             அதற்க்கு  துபாய் அரசர் மறுப்பு தெரிவித்துள்ளார்.ஆகவே துபாயில் உள்ள வாகனங்கள் சவுதி செல்லும் போது அவர்களுடைய வாகனங்களை கொண்டு இடித்தும்,தகராறு செய்தும் வந்தார்கள்.ஏனென்றால்,துபாய் வாகனங்களில் இந்த கட்டிடத்தின் புகைப்படம் இருப்பதினால்.

           இத்தகைய பிரச்சனைகள் கிளம்பிய உடன் இந்த கட்டிடத்தின் புகைப்படத்தை உடனே நீக்குமாறு துபாய் அரசு உத்தரவு பிறப்பித்தது.இருப்பினும் இந்த கட்டிடத்தை அகற்றுவதற்கும்,வேறு இடம் வாங்குவதற்கும்,அதில் வேறு ஹோட்டல் அமைப்பதற்கும் எவ்வளவு செலவு ஆகுமோ எல்லாவற்றையும் தானே ஏற்று கொள்கிறேன் ஆனால் இந்த கட்டிடத்தை அப்புற படுத்துங்கள் என்று,சவுதி அரசர் கேட்க, துபாய் அரசரோ முடியாது என்று ஒரே வார்த்தையில் முடித்துள்ளாராம்.


           இன்னும்  இந்த பிரச்னை ஓயாமல் நடந்து கொண்டு இருக்கிறது.பிரச்சனை சுமூகமாக தீர்ந்தால் அனைவருக்கும் நல்லது.இல்லையென்றால் இதன் காரணமாக மத கலவரம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.


பணி சுமை காரணமாக புதிய பதிவுகள் இடுவதில் தாமதம் ஏற்படுகிறது.இருப்பினும் வாரம் ஒரு பதிவு போடலாம் என ஆசை படுகிறேன்.
துபாயில்  என் பயணம் தொடர உங்களுடைய வாழ்த்துக்கள் அவசியம்...
மறக்காமல் உங்கள் கருத்துகளை எழுதி செல்லுங்கள்...

19 comments:

Suresh Kumar said...

Nalla thakaval
valthukkal

ஜெரின் said...

@Suresh Kumar
நன்றி அண்ணா...

கக்கு - மாணிக்கம் said...

அந்த சிலுவை போன்ற தோற்றமே பிறரை அல்லது சவுதியில் வாழும் இஸ்லாமியர்களை கிருஸ்துவர்களாக மாற்றி விடுமா என்ன? இந்த நூற்றாண்டில் இன்னமும் இது போன்ற கிறுக்குத்தனங்கள் சாதாரண மக்களை விட ஆட்சி அதிகாரத்தில் இருப்பதே கொடுமை. இவர்களே உலக அமைதிக்கும் வளர்ச்சிக்கும் கேடானவர்கள். துபாய் அரசு இது போன்ற கிறுக்குத்தனமான கொள்கைகளை கொண்டாட மாட்டார்கள்.
உண்மையில் உலகில் மத தீவிர வாத போக்கை வளர்த்துவிட்டவர்கள் இந்த சவூதி அரேபியர்கள்தான். இன்று அமெரிக்காவின் அடிப்பொடிகள்.

ஜெரின் said...

@கக்கு - மாணிக்கம்
துபாய் அரசு இது போன்ற கிறுக்குத்தனமான கொள்கைகளை கொண்டாட மாட்டார்கள்,ஆனால் ஒரு வேளை அந்த கட்டிடம் அரசருடையது அல்லாமல் இருந்திருந்தால் ஒரு வேளை இடிக்க பட்டுருக்கலாம் அல்லவா?

ஜெரின் said...

@கக்கு - மாணிக்கம்உங்கள் வருகைக்கும் பின்னூடத்திற்கும் நன்றி நண்பரே...

கக்கு - மாணிக்கம் said...

// ஒரு வேளை அந்த கட்டிடம் அரசருடையது அல்லாமல் இருந்திருந்தால் ஒரு வேளை இடிக்க பட்டுருக்கலாம் அல்லவா? //

ஜெரின் said.

உண்மைதான். அது மட்டும் அரசின் அல்லது அவர்களின் குடும்பத்தின் உடமையாக இல்லாமல் வேறு ஒரு வெளிநாட்டு நிறுவனமாக இருந்திருந்தால் நிச்சயம் இடிக்கசொல்வார்கள். உண்மைதான்.

polurdhayanithi said...

பாராட்டுகள் நண்பரே நல்ல செய்திகள் .
இசுலாமும் , கிருத்துவமும் முட்டிகொன்டுதான் இருக்கிறது . அனால் அவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ கலைகளையும் யார் அவர்களுக்கு கட்டுவார்கள் என தெரிய வில்லை .
ஏனெனில் இசுலாமும் , கிருத்துவமும் தமிழில் இருந்து தோன்றியது என வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர்

ஜெரின் said...

@polurdhayanithi
உண்மை தான்,நாம் புரிந்து கொண்டது போல அனைவரும் புரிந்து கொண்டார்கள் என்றால் எந்த பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக வாழலாம்.

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே...

shibi said...
This comment has been removed by a blog administrator.
அரசன் said...

அருமையான தகவல் நண்பரே...

உங்கள் மேலான தொடரட்டும்.. வாழ்த்துக்கள்

ஜெரின் said...

@அரசன்
உங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...

Sivany said...

நல்ல தகவல். மதம் என்னும் மதம் பிடித்துவிட்டது..

shibi said...

ஓ இறைவா உன் பெயரால் எங்கள் பாரதம் தான் புண்ணாகிறது என்று நினைத்தேன்..... துபாய்லுமா இந்த அவல நிலை.... கூடிய விரைவில் துபாயும் இந்தியாவாக மாறிவிடும் போல தெரிகிறதே

Chitra said...

interesting தகவல். பகிர்வுக்கு நன்றிங்க.

ஜெரின் said...

@Sivany
ஆம் மதத்தின் பெயரை சொல்லி மதி கேடர்கள் ஆகி விட்டார்கள்.

உங்கள் பின்னூடத்திற்கு நன்றி.

ஜெரின் said...

@shibi
துபாயில் உள்ள நிலவரத்தை பார்க்கும் போது நமுடைய பாரதம் எவ்வளவோ மேல் நண்பா...

ஜெரின் said...

@Chitra
உங்கள் வருகைக்கு நன்றி...

ம.தி.சுதா said...

அடடா இப்படியெல்லாம் நடக்குதோ...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4

தருமி said...

ஜெரின்
உங்களுக்கு இது புரியலையா? எல்லாம் “பரிசுத்த ஆவி” செய்த வேலைதான் இது!

:)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting