பத்மஸ்ரீ.கமல்ஹாசன் திரைப்பட துறையில் வந்து 50 வருடம் கடந்து விட்டது.அவர் பல தரப்பட்ட வேடங்களில் நடித்து, நடிப்பிற்க்கே பெருமை சேர்த்து கொடுத்தவர்.
ஆனால் இவர் மக்கள் நலத்திற்க்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.சில வருடங்களிற்கு முன்பே தன்னுடைய உடல் உறுப்புகளை எல்லாம் தானம் செய்து விட்டார்.
ரேடியோ ஹலோ fm,எய்ட்ஸ் தினத்தன்று ஒரு புதிய திட்டமானதை அறிமுகபடுத்தி அதை செயல் படுத்தும் நோக்கத்தில் கமல்ஹாசனை தொடர்பு கொண்டுள்ளனர்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்க பட்ட குழந்தைகளுக்கு காப்பீட்டு வசதிகள் செய்து கொடுப்பதே இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம்.
கமல்ஹாசன் நோக்கத்தை கேட்ட மறு நிமிடமே தன்னுடைய முழு ஆதரவை இதற்காக தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்.அவர் முதல் கட்டமாக 150 குழந்தைகளை தத்து எடுத்து அவர்களுக்கான முழு பொறுப்பையும் ஏற்று கொண்டார்.அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்திற்கு "பெற்றால் தான் பிள்ளையா" என்று பெயரும் சூட்டி இருக்காராம்.பின்பு இதற்கான பிரசாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.அவர் அனைவரிடமும் சொல்வதெல்லாம் "எதற்கெல்லாமோ செலவு செய்கிறோம்,ஒரு குழந்தைக்காக 750 கொடுங்கள்,அது அவர்களுடைய மருத்துவ வசதிக்காக பயன் படுத்த படும்,
ஏன்?
" பெற்றால் தான் பிள்ளையா"
உண்மையாகவே சொல்ல வேண்டுமென்றால் கமல்ஹாசன் ஒரு சரித்திர நாயகன் தான்.
Monday, December 7, 2009
பெற்றால் தான் பிள்ளையா...


Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment