Tuesday, September 1, 2009

கன்யாகுமரிக்கு அழகு சேர்க்கும் திருவள்ளுவர் சிலை



"இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈ.டுபடுவதும், திருவள்ளுவரை பற்றி எழுதுவதும் ஒன்றுதான் " என்பதை நானறியாதவனல்லன்.முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு அவருள் இருந்ததை நாம் காண முடிகிறது.
வள்ளுவருக்கு இணையான மேதை இன்று இல்லை என்றும் முன்னர் இருந்ததில்லை என்றும் நாளை தோன்றப் போவதில்லை என்றும் சூளுரைக்கலாம். திருவள்ளுவருக்குப் பெருமை சேர்கிறதோ இல்லையோ பேச்சாளரின் வாய் வீச்சு தொடரும்போது அவர் மெத்தப் படித்த மேதாவி என்பதைச் சபை ஏற்றுக்கொள்ளும்படி ஆகிவிடும்.

அப்படியாக தமிழ் இதயங்களில் பெரும் இடத்தை பிடித்த திருவள்ளுவர் கன்னியாகுமரி-இல கம்பீரமாக காட்சி அழித்து கொண்டு இருகின்றார்.
இந்த வள்ளுவர் சிலையின் மொத உயரம் 133 அடி,ஒரு அதிகாரத்திற்கு ஒரு அடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சிலைக்கான கற்கள் சிறுதாமூர்,பட்டுமளைகுப்பம் மற்றும் அம்பாசமுத்ரம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வர பட்டவை.
திரு வள்ளுவர் சிலைக்கு வரும் பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருகின்றனர்.திருவள்லுவலலுவர் சிலை இருபதினால் தான் கன்னியாகுமரி கடலிற்கு அழகு என்று சொன்னால் மிகை ஆகாது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting