Tuesday, August 3, 2010

அழகிய நாட்கள்...

"படத்தை கிளிக் பண்ணுங்கள்"

கடந்து வந்த நாட்கள்...
அது காணாமல் போனது!!!

கடக்கின்ற நாட்கள்...
அது நம்மை வெறுத்து திரும்பியது!!!

வரும் நாட்கள்...
அது தெரியாமல் நின்றது!!!

இப்படி இருக்கும் நாட்கள்,அழகாய் மாறுமா???

ஏன் மாறாது? ஏன் மாற்ற வேண்டும்???

நம்மை வெறுக்கும் உலகை நேசித்து பார்,
அனைவருக்கும் உதவி செய்து பார்,
எந்த காரியத்தையும் முயற்சித்து பார்,
முடியாது என்ற வார்த்தையை வெறுத்து பார்,
சுயநலத்தை வெறுத்து,பொதுநலத்தை பேணி பார்,
பிறர் மீது அன்பை செலுத்தி பார்,

ஏன் மாறாது என்ற கேள்விக்கு பதில் தெரியும்...

நேற்று,இன்று,நாளை,
அது வரும்,செல்லும்,
அதில் நம் பங்கு என்ன என்பதை சிந்திக்க வேண்டாமா???
நாளைய உலகம் நம்மை பற்றி பேச வேண்டாமா???
அனைவரும் நம்மை போற்ற வேண்டாமா???
பிறர் நம் மீதும் அன்பு செலுத்த வேண்டாமா???

இவற்றை யோசித்து பார்,
ஏன் மாறாது என்ற கேள்விக்கு விடை தெரியும்...


இருந்தோம்!!! சென்றோம்!!!
என்றில்லாமல்,

இருந்தோம்!!! சாதித்தோம்!!! சென்றோம்!!!
என்று தான் இருக்க வேண்டும்...


இதை கதையாகவோ? கவிதையாகவோ? பார்க்க வேண்டாம்...
இதில் சொல்ல பட்டிருக்கும் கருத்துகளை மட்டும் மனதில் கொள்ளுங்கள்....

என்றும் அன்புடன் ரா.ஜெரின்...

Monday, August 2, 2010

பிலாக்கரில் நம்முடைய படத்தை தலைப்பில்(favicon) கொண்டு வர வேண்டுமா???

                               தங்களுடைய வலைபகுதியில் FAVICON வைப்பதில் அனைவருக்கும் விருப்பம் இருக்கும்.ஆனால் சிலருக்கு அதற்கான வழிமுறைகள் தெரியாமல் இருப்பதினால் FAVICON வைப்பதில் சிக்கல் ஏற்படும்.

                             நிஜமாங்க,நானும் இவ்வளவு நாள் தெரியாமல் தான் இருந்தேன்.நான் அறிந்த விஷத்தை இப்போது உங்களிடமும் பகிர்ந்து கொள்ள போகிறேன்...
                           நீங்கள் FAVICON வைப்பதற்காக முதலில் உங்களுக்கு புடித்தமான படத்தினை photshop அல்லது GIMP மூலமாக திருத்தி கொள்ளுங்கள்.அந்த படத்தினை 32X32 அளவில் சேமித்து கொள்ளுங்கள்...
  • அடுத்த படியாக நீங்கள் சேமித்த படத்தினை இணைய தளத்திற்கு அனுப்பி url பெற வேண்டும்.
  • அடுத்ததாக உங்களுடைய பிளாக்கர் டாஷ்போர்ட் திறந்து கொள்ளுங்கள்.
  • அதில் design சென்று edit html சொடுக்குங்கள் இப்போது திறக்கும் பக்கத்தில் Expand Widjet -ஐ  சொடுக்குங்கள்.
  • அடுத்த படியாக ctrl + f அழுத்துங்கள். அதில் வரும் find பகுதியில்

<b:skin><![CDATA[/*  என்னும் கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.
"படத்தை கிளிக் பண்ணுங்கள்"
 <b:skin><![CDATA[/* இதற்கு மேலே,


<link href='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQiRCl1vzrgTEqGeKB-MZ227_L-I3PC9H7aomt3wHCTW89QcceDfbOiN0VMMWKEDE6cYV4RoGoBoOo8C8yTACSMyqUBuUTpOgUSy6ZlJE_M9SpZk_cgCtNcEDWNJvSZbx-5YfXyOK2xuo/s1600/rainbow.png' rel='shortcut icon'/>

என்னும்   கோடிங்கை  காப்பி செய்து பேஸ்ட் செய்து விடுங்கள்...
"படத்தை கிளிக் பண்ணுங்கள்"
  • இதில் சிவப்பு  நிறத்தில்   குறிக்க பட்டுள்ள எழுத்துகளை நீக்கி விட்டு உங்களுடைய படத்தின் URL -ஐ கொடுங்கள்.


  • இப்போது   நீங்கள் மாற்றங்களை சேமித்து கொள்ளலாம்(Save Template).


அவ்வளவு தான்  வேலை முடிந்தது....உங்களுடைய வலைபகுதியை preview செய்து பாருங்கள்.

உங்களுடைய படத்தையே தலைப்பில் கண்டு மகிழலாம்.

முயற்சி செய்து பாருங்கள்...புடிதிருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்...

Sunday, August 1, 2010

நண்பர்கள் தின சிறப்பு பதிவு...

ஆகஸ்ட் முதல் ஞாயிறு  என்றாலே அனைவருக்கும்  நாபகத்துக்கு வருவது நண்பர்கள் தினம் தான்.ஆனால் அதற்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்குதாம்.

அது என்ன  கதை என்றால்..............



1935 வது வருடம்,அமெரிக்க அரசாங்கம் ஆகஸ்ட் முதலாவது சனி கிழமை அன்று ஒரு வாலிபரை தவறுதலாக கொன்று விட்டனர்.அதற்கு அடுத்த தினமான ஞாயிற்று கிழமை அன்று அந்த வாலிபருடைய நண்பன்,தன் உயிர் நண்பனின் பிரிவை தாங்க முடியாமல் தன் உயிரையும் மாய்த்து கொண்டார்.

அந்த வாலிபருடைய ஞாபகார்த்தமாக அனைத்து வருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்று கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தது  அமெரிக்க அரசாங்கம்.நண்பர்கள் தினம்  73 வது வருடமாக இந்த ஆண்டு கொண்டாட படுகிறது.

நானும்  இந்த தினத்தில் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்து தெரிவிப்பதில்  பெருமை  கொள்கிறேன்..................

நண்பர்கள் தின வாழ்த்துகள்.....................

Wednesday, July 28, 2010

என்னுடைய புதிய வலைபகுதி ஆரம்பம்...


அன்பு தோழர்களே!

இந்நாள் வரை நான் http://www.jerinrjn.blogspot.com உபயோகித்து வந்தேன்.இப்போது என்னுடைய பெயரிலே புதிய வலைபகுதி வாங்கியுள்ளேன்.

Tuesday, July 20, 2010

பழமைக்கு திரும்பும் தமிழகம்...........



இன்றைய கால கட்டத்தில் உலகம் பழமைக்கு திரும்புகிறது என்பதற்கு தமிழகம் ஒரு எடுத்து காட்டாக விழங்குகிறது.எப்படியெனில்,

சினிமா,
சினிமாவை எடுத்து கொண்டால் பழைய கதைகள்,திரைப்பட பெயர்கள் மற்றும் பாடல்கள் முதலியவற்றை மாற்றி புதிய விதத்தில் வெளியிடுகிறார்கள்.

உடை,
உடையை எடுத்து கொண்டால் பழைய உடைகள் தான் இப்போது புது பொலிவாக மலிந்து வருகின்றன.................

சினிமா,உடை இவை இரண்டை காட்டிலும் மிகவும் பழமைக்கு திரும்பியது என்வென்றால் மின்சாரம்.
மின்சாரத்தை பழமைக்கு கொண்டு சென்ற பெருமை தமிழ் நாட்டிற்கு மட்டுமே உள்ளது.எப்படிஎன்றால்,

பழங்காலத்தினர் மின்சார வசதி இல்லாமல் மண்ணெண்ணெய் விழக்கில் தங்களது பணிகளை செய்து வந்தனர்.

அனால் இப்போது மின்சார வசதிகள் இருந்தும் மண்ணெண்ணெய் விழக்கில் பணிகளை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

காரணம் "மின்வெட்டு"

இந்த நிலை தொடர்ந்தால் மிக எழிதில் தமிழகம் பழங்காலத்திற்கு திரும்பி விடும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

"பழமை தங்கம் போன்றது"(Old Is Gold)

Monday, July 19, 2010

நோக்கியா மொபைல்களை பார்மட் செய்வது எப்படி? முறை 2 மற்றும் முறை 3




உங்களுடைய மொபைல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதா?

உங்களுடைய மொபைலில் வைரஸ் புகுந்துள்ளதா?

கவலையை விடுங்கள்..........................
இப்போது உங்களுடைய நோக்கியா N சீரீஸ் மொபைலை எளிதாக பார்மட் செய்து விடலாம்..........................
பார்மட் செய்வதற்கு மூன்று முறைகள்........................................

முதல் முறையை முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்..................

முறை : 2,( Hard Format)

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : *#7370# ஆகிய பொத்தான்களையும் அமுக்கி புடிக்க வேண்டும்,

3 : இந்த பொத்தான்களை அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த பொத்தான்களை விடுவியுங்கள்.


முறை : 3,(Soft Reset)

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : *#7780# ஆகிய பொத்தான்களையும் அமுக்கி புடிக்க வேண்டும்,

3 : இந்த பொத்தான்களை அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த பொத்தான்களை விடுவியுங்கள்.

இப்போது உங்கள் மொபைல் பார்மட் ஆகிவிடும்........................

மீண்டும் புதிதாக அனைத்து அமைப்புகளையும் அமைத்து கொள்ளுங்கள்.................

இப்போது நீங்கள் வைரஸ் இல்லாத மொபைலை உபயோகிக்கலாம்.........................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting