Wednesday, July 31, 2013

இரண்டாம் வருகை!!!!!!

              ஒரு ஆண்டுகளுக்கு முன்பு,பதிவுலகம் என்பது என் உயிராக இருந்தது,ஆனால் அதனை நல்ல முறையில் கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது ....காரணம் நேரமின்மை.....

              நேரமின்மையின் காரணமாக என்னுடைய  www.jerin.co.in என்ற என்னுடைய வலைபகுதியை இழந்து விட்டேன்....வருத்தம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் இத்தனை நாள் சென்று கொண்டிருந்தேன்.....

             இப்போது மீண்டும் பதிவுலகத்தில் நுழைவதற்கு ஒரு வாய்ப்பு  கிடைத்துள்ளது.....இந்த வாய்ப்பினை நான் தவற விடமாட்டேன்,என்ற உறுதி மொழியுடம் மீண்டும் கால் பதிக்கிறேன்....

            என்னை இவ்வளவு நாளும் ஆதரித்து,இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது பதிவுலக நண்பர்கள் நீங்கள் தான்....மீண்டும் உங்கள் ஆதரவுடம் நான் கழத்தில் இறங்குகிறேன்....

             இதனை என் இரண்டாம் வருகை என்றே நான் கருதிகிறேன்....மேலும் ஆதரவு தருவீர் என கேட்டு கொண்டு என் வருகையை பதிவு செய்கிறேன்....


                    நன்றி..... 

Friday, November 4, 2011

பேஸ்புக் கருத்து பெட்டியை பிளாக்கரில் நிறுவுவது எப்படி?

                நம்மில் அதிகமானோர் பேஸ்புக்கில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருவது உண்மை தான்.அந்த பேஸ்புக் வாயிலாக நம் பிளாகர்யையும் இணைப்பதற்கு பல வழிகள் உள்ளன.அந்த வழிகளில் ஓன்று தான் பேஸ்புக் கருத்து பெட்டி....

                இந்த கருத்து பெட்டியின் உபயோகம் என்று பார்த்தால்,நம்முடைய கருத்துகள் அனைத்தும் நேரடியாக பேஸ்புக்கில் சென்றடையும்....இதன் மூலம் நம்முடைய நண்பர்கள் அனைவரும் நம் தளத்தை வந்து பார்பதற்கு எதுவாக இருக்கும் என நம்புகிறேன்....

                இப்போது எவ்வாறு இந்த கருத்து பெட்டியை நிறுவலாம் என்று பார்க்கலாம்..

  1. முதலில் நாம் www.facebook.com/developer என்னும் தளத்தில் சென்று அதில் நமக்கென புதிய அப்ளிகேசன் துவங்க வேண்டும்...
அதற்காக "create new application" என்னும் லிங்கினை கிளிக் செய்யவும்...



 2. அதில் நம்முடைய தளத்தின் பெயரை டைப் செய்யவும்...







 3. பின்பு agree மற்றும் continue என்ற லிங்கினை கிளிக் செய்யவும்...






  4. Continue என்னும் லிங்கினை அழுத்திய பின்பு புதிய பக்கம் திறக்கும்....அதில் Application ID என்ற பெயரில் உங்களுக்கான ID கொடுக்க படும்.அதை குறித்து வைத்து கொள்ளுங்கள்....



  5. இப்போது நீங்கள் www.blogger.com என்ற தளத்தில் நம்முடைய கணக்கை திறந்து,

               Templates--->Edit HTML--->Proceed--->Expand Widjet Template

  கிளிக் செய்து அதில் ctrl + f அழுத்தி <data:post.body/>  என்று டைப் செய்யவும்...


  6. <data:post.body/> என்பதின் கண்டுபிடித்து அதன் கீழ் 

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
  <div id='fb-root'/>
  <script>
  window.fbAsyncInit = function() {
  FB.init({appId: &#39;YOURAPPID&#39;, status: true, cookie: true,
  xfbml: true});
  };
  (function() {
  var e = document.createElement(&#39;script&#39;); e.async = true;
  e.src = document.location.protocol  +
  &#39;//href=connect.facebook.net/en_US/all.js&#39;;
  e.async = true;
  document.getElementById(&#39;fb-root&#39;).appendChild(e);
  }());
  </script>
  <fb:comments/>
  </b:if>


என்னும் நிரலை Copy  செய்து paste செய்யவும்...

  முக்கியமாக, "YOURAPPID" என்பதை மாற்றி,உங்களுடைய பேஸ்புக் அப்ளிகேசன் ID- யை டைப் செய்யவும்.


  7.  இப்போது மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்....


குறிப்பு, <data:post.body/> என்பது மூன்று  அல்லது நான்கு இடங்களில் இருக்கும்,அதில் நான்கு இடங்களிலும்,இந்த நிரலை paste செய்து பாருங்கள்....


   இப்போது உங்களுக்கான பேஸ்புக் கருத்துபெட்டி தயாராகி விடும்....

    

Friday, October 28, 2011

மலையாள திரைப்படங்களின் இன்றைய நிலை....

                     தமிழ் திரைப்படங்களை விமர்ச்சிப்பதில் வல்லுனர்கள் மலையாளிகள் என்பது எல்லோரும் அறிந்ததே...ஆனால் அப்படி பட்ட மலையாள சினிமாவில் இப்படி பட்ட ஒரு நிலைமை வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்...

                    கடந்த அக்டோபர் 26ம் தேதி கேரளத்தில் வெளி வந்த "கிருஷ்ணனும் ராதையும்" திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது...

                    இத்திரைபடத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால்,நடிப்பு,இயக்கம்,தயாரிப்பு,இசை,பாடல் வரிகள்,சண்டை பயிற்சி,கலை,பாடகர்,கதை,திரைக்கதை,வசனம்,உடைகள் போன்ற 16 பங்குகளை "சந்தோஸ் பண்டிட்" என்பவர் ஏற்றுள்ளார்.ஒரே நபர் காமெராவை தவிர மற்றுள்ள எல்லாவற்றையும் செய்து ஒரு திரைபடத்தை வெளியிட்டுள்ளார்.

                     கிருஷ்ணனும் ராதையும் திரைப்படம் கேரளா திரைப்பட உலகில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.இது வரை நடந்த அணைத்து காட்சிகளும் திரையரங்கு நிரம்பி வழிகிறது என்பது தான் இப்போதைய நிலவரம்.இந்த திரைபடத்தின் டிரைலரை(Trailer ) கீழே கொடுக்க பட்டுள்ள லிங்கில் காணலாம்...

                              "இங்கே கிளிக் செய்யுங்கள்"

                       இந்த வீடியோவை பார்த்த பின்னர் உங்களுக்கே தெரியும் இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்று?இப்படியும் ஒரு திரைபடத்தை மலையாளிகள் தினமும் சென்று பார்த்து  கொண்டு தான் இருக்கிறார்கள் என்றால் அதை போன்ற ஒரு பைத்தியகார தனம் வேறு ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.

                     இதை போன்ற திரைபடத்தை தமிழர்கள் பார்த்தால்,என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்....

                     இப்படியும் ஒரு திரைபடத்திற்கு,,,வரவேற்ப்பு கொடுக்கும் மலையாளிகளுக்கு தமிழ் சினிமாவின் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.......


இப்படி இருக்கிறது மலையாள திரைபடத்தின் இன்றைய நிலை....

Thursday, August 25, 2011

கணினியில் rundll32.exe கோப்பின் பிரச்சனைகள்...


                                           விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழை செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.

                                         rundll32.exe கோப்பு நம் கணணியில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்த கோப்பு தங்கி இருந்து மற்ற கோப்புக்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்த கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழை செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணணி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன.

                                        ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ அல்லது காம் கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல் கோப்புக்கள் இயங்காது. விண்டோஸ் சிஸ்டத்திற்கு இவற்றை இயக்க இன்னொரு கோப்பு தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe கோப்பு. 32 பிட் டி.எல்.எல் கோப்புக்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

                                         இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கணணியில் rundll32.exe என்ற கோப்பு கெட்டுப் போய் விட்டதென்று செய்தி கொடுத்து சரியான rundll32.exe கோப்பு வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும். இதில் கிளிக் செய்தால் அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் செய்திகளை பார்த்தால் சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.

Sunday, May 1, 2011

கிராமம் தாழ்ந்ததும்,நகரங்கள் உயர்ந்ததுமா???

              இன்றைய தமிழகத்தில் பெரிதும் பாதிக்க பட்டுள்ள ஒரு விஷயம் என்னவென்றால், மின்வெட்டு...
            

            இந்த மின்வெட்டு காரணமாக பல தர பட்ட மக்களும் பாதிக்க பட்டுள்ளார்கள்.இதில் பெரிதும் பாதிக்க பட்டுள்ளது கிராமபுற மக்கள் தான்.

             11,300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் தமிழகத்தில் இப்போது வெறும் 10,214 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது...மின் பற்றாகுறை காரணமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டு துவங்க பட்டுள்ளது...

            இதில் மின்சாரம் அதிகமாக செலவு செய்வது நகர வாசிகள் என்று அனைவராலும் சொல்ல முடியும்,கிராமங்களில் வசிக்கின்றவர்கள் மிகவும் குறைவான மின்சாரமே உபயோகித்து வருகிறார்கள்...

           இப்படியான சூழ்நிலையில் நகரங்களில் ஒரு மணி நேரமும்,கிராமங்களில் மூன்று மணி நேரமும் மின்வெட்டு இருக்கிறது...

          ஏழைகளை காப்பாற்றுவோம்,கலங்கவிடமாடோம்,கண்ணீரை துடைப்போம் என்று அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை பேசி கொண்டிருந்தனர்...

        ஏழைகள் பலர் இருப்பது  கிராமங்களில் தான் என்பதை அந்த அரசியல்வாதிகளான குள்ளநரிகளுக்கு புரியவில்லையா  இல்லை தெரியவில்லையா???

       சொகுசாக வாழ்பவன் அங்கே சொகுசாக வாழ்கிறான்...கஷ்ட படுகிறவன் இங்கே கஷ்ட பட்டுக்கொண்டே இருக்கிறான்...இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உழைப்பவர்கள் நிலை கேள்வி குறி ஆகி விடும் என்பதில் எந்த மாற்று கருத்தும்  இல்லை....

     நகரங்களில் வாழ்பவர்கள் மட்டும் என்ன தெய்வ பிறவிகளா? அவர்களுக்கு மட்டும் உல்லாச வாழ்கையும் கிராம புற ஏழை மக்களுக்கு கொடுமையான வாழ்க்கையா???

சிந்தியுங்கள்....சிந்தியுங்கள்....

        இன்று தொழிலாளர் தினம்,ஆனால் உண்மையிலே உழைக்கும் எல்லா  தொழிலாளர்களுக்கு சமீப காலமாக எல்லா தினங்களும் துக்ககரமான நாட்களாக தான் அமைகிறது....

       மின்சாரம் என்பது உபயோக படுவது நகரங்களில் உள்ள பெரிய தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல .கிராமங்களில் பலர் செய்கின்ற வீட்டு தொழிலுக்கும் தான் தேவைபடுகிறது...

       மின்சார பற்றாகுறை என்றால் ஒத்துகொள்கிறோம்,அனால் அதை சரி செய்வதற்கு நகரத்திற்கும்,கிராமத்திற்கும் ஒரே அழவிலான மின்வெட்டை இன்று முதல் பகிருங்கள்...

              நான் சற்று ஆவேசத்துடன் இந்த தொழிலாளர் தினத்தன்று என்னுடைய பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.....அனால் இதை வாசிக்கும் நண்பர்களே சற்று சிந்தியுங்கள்....இதற்க்கு நம் பதிவர்கள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை......

                     

Friday, April 29, 2011

இன்றைய தமிழகம் ................

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார் - எதற்காக இதனை கஷ்டப்படுகிறாய்?

நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?

அவர் சிரித்த படி சொன்னார் - என்னை பார்,

1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன்.

போரடித்தால் வண்ணத் தொலைகாட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்.

உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!

உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?

முதலாமவர் சிரித்த படி கேட்டார் - நான் யார் தெரியுமா?

தமிழ் நாட்டுக் குடிமகன்

என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்

சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம்,

பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்,

குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சை இலவசம்

எதற்காக உழைக்க வேண்டும்?

நான் கேட்டேன் - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?

பலமாக சிரித்த படி உரைத்தார்,


மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்,

குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாளர் பள்ளியில்,

படிப்பு சீருடையுடன் , மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,

பாடப்புத்தகம் இலவசம்,படிப்பும் இலவசம் , பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம்,

தேவை என்றால் சைக்கிளும் இலவசம்.

பெண் பருவம் அடைந்தால் திருமண உதவி தொகை ரூபாய் 25000 இலவசம்,


1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் ,

தேவை என்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,

மகள், பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,

நான் எதற்கு உழைக்க வேண்டும்!!!

வியந்து போனேன் நான்!!!

என் உயிர் தமிழகமே எத்தனை காலம் இந்த நிலை தொடரும்?

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு ,

ஓன்று கையூட்டு , மற்றொன்று பிச்சை !!!


இதில் நீ எந்த வகை ? எதை எடுத்து கொள்வது ?

உழைக்காமல் உண்டு சோம்பேரியாகிறாய் - இலவசம் நின்று போனால் உன் நிலை !!!

உழைப்பவர் சேமிப்பை களவாட தலைபடுவாய் !!!

இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்

அமைதி பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை

இன்னும் வெகு தொலைவில் இல்லை .

தமிழா விழிதெழு - உழைத்திடு

இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு

தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!

நாளைய தமிழகம் நம் கையில் ,

உடன்பிறப்பே சிந்திப்பாயா !!!

மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!!

Monday, April 25, 2011

பிளாக்கரில் அழித்த பின்னூட்டத்தை மறைப்பது எப்படி?

                      நாம் புதிதாக பதிவுகள் வெளியிட்ட பின்பு அந்த பதிவுனுடைய வரவேற்பினை நோக்கி இருப்பது வழக்கம்...
         
                     குறிப்பாக வாக்குகளையும்,பின்னூட்டத்தையும் மிகவும் எதிர்பார்க்கிறோம்.அதற்க்கு ஏற்ற பின்னூட்டங்களும் வாக்குகளும் கிடைக்கும் போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம்,இது தான் இயற்கை...

                    அனால் மறுமொழி எழுதும் போது சிலர் வரம்புகளை மீறுவதாலும்,தவறுதலாக மறுமொழி எழுதுவதாலும்,குறிப்பிட்ட பின்னூட்டத்தை நான் அழிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ள படுகிறோம்.

                   அவ்வாறு நாம் பின்னூட்டத்தை அழிக்கும் போது,அந்த பின்னூட்டம் இருந்த இடத்தில் "This post has been removed by the author" என்ற வாசகம் காணப்படும்...

                   இந்த வாசகங்கள் இருப்பதினால் நாம் பின்னூட்டத்தை அழித்திருப்பது அனைவருக்கும் தெரிய வருகிறது.அதனால் இந்த வாசகங்களை மறைக்க எழிய வழியை கீழே பார்க்கலாம்..

   1.பிளாக்கர் கணக்கில் உள்நுழைந்து Dashboard ---> Layout ---> Edit HTML செல்ல வேண்டும்.

 2.அதில் "Expand Widjet Templates" -யை கிளிக் செய்ய வேண்டும்...

 3.Ctrl + F -யை கிளிக் செய்து கீழே கொடுக்க பட்டுள்ள நிரலை காப்பி, பேஸ்ட் செய்து, கண்டுபுடிக்க வேண்டும்...

<b:loop values='data:post.comments' var='comment'> 

  4.இவற்றை கண்டுபுடித்த பின்பு,இந்த நிரலின் கீழே ,


<b:if cond='data:comment.isDeleted'>

<b:else/>
 என்னும் நிரலை காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும்...

 5.இப்போது " <b:loop " என்னும் எழுத்துகளுக்கு மேலே,


</b:if>

என்னும்  நிரலை காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும்...

 6.இப்போது இந்த மாற்றங்களை அனைத்தையும் சேமித்து கொள்ளுங்கள்...

                         இனி நாம் எப்போது பின்னூட்டங்களை அழித்தாலும் அதில் வரும் வாசகங்கள் மறைந்து விடும்...

                        


Saturday, April 23, 2011

பிளாக்கர் டெம்ப்லேட்(Template) அழிந்து போனால் திரும்ப பெறுவதற்கான வழிகள்...

               பதிவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல்,தங்களுடைய வலைபகுதியை அழகான டெம்ப்லேட் மூலமாகவும்,விட்ஜெட்கள் மூலமாகவும் அலங்கரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்....

              ஆனால் அவ்வாறு டெம்ப்லேட் மற்றும் விட்ஜெட் சேர்க்கும் போது சில பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டி வருகிறது.சில சமயங்களில் விட்ஜெட் சேர்க்கும் போது நம்முடைய டெம்ப்லேட் அழிந்து(Corrupt) விடுகிறது...

             இந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் நம்மில் பலர் திணறி கொண்டு இருப்போம்...

           அந்த பிரச்சனையை சரி செய்வதற்காக மிகவும் எழிதான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம்.


 1.முதலில் Dashboard--->Design--->Edit HTML செல்ல வேண்டும்.

 2.அதில் Expand Widjet Template என்பதை இம்முறை கிளிக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை...

 3.Ctrl + F என டைப் செய்து கீழே உள்ள நிரலை காப்பி செய்து பேஸ்ட் செய்து கண்டுபுடிக்க வேண்டும்...

 <b:widget id='Blog1' locked='true' title='Blog Posts' type='Blog'/>

 4.இதில் " Blog1" என்று சிவந்த நிறத்தில் குறிக்க பட்ட எழுத்துக்களை மட்டும் மாற்றி  "Blog2" என டைப் செய்ய வேண்டும்.

 5. இப்போது மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்...

                         இப்போது நாம் இழந்த நம்முடைய வலைபகுதி மீண்டும் நமக்கு திரும்ப கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்...

                        நாம் முன்னர் சேமித்து வைத்திருந்த வாக்கு பட்டை மற்றும் இதர விட்ஜெட்கள் அனைத்தும் அழிந்து விடும்.அதனை மீண்டும் நாம் தரவிறக்கி கொள்ளலாம்...

                        நாம் தவறுதலாக எப்போதாவது இதே போல் பிரச்சனையில் சிக்கி கொண்டால் இந்த பதிவு முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறேன்...


                 

Friday, April 22, 2011

நம் பதிவுகளை பேஸ்புக்கில் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது எப்படி?

                                   நம்முடைய பதிவுகளை திரட்டிகளின் மூலம் பலருக்கும் அறிமுகபடுத்துகிறோம்,இப்போது பேஸ்புக் மூலமாகவும் பகிர்ந்து கொள்கிறோம் ஆனால் பேஸ்புக்கில் நாம் ஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.
                                   ஆனால் இப்போது நம்முடைய பதிவுகளை நம்முடைய வலைபகுதியில் பதிவிட்ட உடனே  பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால்,மிகவும் எழிதான முறைகளை கையாண்டால் போதும்.

1.முதலில் நம்முடைய பேஸ்புக் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

2.அதில் நம்முடைய புகைப்படத்தின் கீழ் உள்ள Notes-யை திறந்து கொள்ளுங்கள்.

3.அதில் "WRITE A NOTE" யை கிளிக் செய்யுங்கள்.

4.அந்த பக்கத்தில் ஏதாவது ஒரு வாசகத்தை எழுதி அதை "SAVE DRAFT" -கிளிக் செய்து சேமித்து கொள்ளுங்கள்.
(இந்த வாசகத்தை பின்னர் அழித்து கொள்ளலாம்)

5.வாசகங்களை சேமித்த பின்னர் கீழே "EDIT IMPORT SETTINGS"-யை கிளிக் செய்யுங்கள்.இப்போது நம்முடைய வலைப்பக்கத்தின் முகவரியை கொடுக்க வேண்டிய புதிய பக்கம் திறக்க படும்.

6.அந்த புதிய பக்கத்தில் நம்முடைய வலைப்பக்கத்தின் முகவரியை டைப் செய்து "START IMPORTING" என்பதை கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களுடைய வலைப்பக்கம் பேஸ்புக்குடன் பகிர்வு துவங்கி விடும்.

7.அடுத்த படியாக உறுதிபடுத்துவதற்காக "CONFIRM IMPORT" என்பதனை கிளிக் செய்யுங்கள்.

8.அவ்வளவுதான் இப்போது உங்களுடைய வலைப்பக்கம் பேஸ்புக்குடன் பகிர்ந்து விடும்,நம்முடைய அடுத்த பதிவுகள் நேரடியாக பேஸ்புக்கில் பகிர படும்.

நீங்களும் முயற்சித்து பாருங்கள்....
பயனுள்ளதாக இருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்.... 
 

Friday, April 1, 2011

இன்டர்நெட்! ஏமாறாமல் இருக்க பாதுகாப்பான வழிகள்!

இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

சிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.

இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.

1. முன்பணம் கட்டாதீர்கள்:

ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது, கடன் தீர்க்கப் பணம் தருகிறோம், பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம், இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, தூண்டிலிட்டு, பின்னர் அதற்கு சரி என்கையில், முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும். இதனை மிக அழகாக நியாயப்படுத்தியும் செய்தி தரப்படும்.

பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான். அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை, அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப் படுத்திவிடுவதே, நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.

2. அக்கவுண்ட் எண் தரலாமா?

மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டால், உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான்.

பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.

3. தானாக தனி நபர் தகவல் தரலாமா?

ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.

4.போலி பேஸ்புக் செய்திகள்:


பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட, உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார், நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.

5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்:


இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.

இந்த ஐந்து வழிமுறைகளையும் கையாண்டால் ஓரளவிற்கு நாம் ஏமாறுவதை நாமே தவிர்க்கலாம்.

Friday, March 25, 2011

விண்டோஸ் - 7 புதிய தகவல்கள்

விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன.

அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. பைல்கள் இடையே எளிதாக:


ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம்.

இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர, விண்டோஸ் 7 எளிய வழியைத் தருகிறது. டாஸ்க்பாரில் உள்ள பைல்களின் ஐகான்களில் கிளிக் செய்கையில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டால், ஒவ்வொருமுறை கிளிக் செய்கையிலும், அடுத்தடுத்த விண்டோ செயல்பாட்டிற்கு கிடைக்கும்.


2.விண்டோக்களைக் கையாளுதல்:


விண்டோஸ் 7, டாகுமெண்ட் மற்றும் புரோகிராம்களைக் கையாள புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. விண்டோ ஒன்றினைக் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தலாம். இதனை ”docking” என விண்டோஸ் 7 கூறுகிறது.

செயல்படும் விண்டோவினை ஏதேனும் ஒரு பக்கமாக, பாதி திரையில் வைத்திட, அதனை இடது அல்லது வலது பக்கமாக, மவுஸ் கொண்டு இழுத்தால் போதும். விண்டோ தானாக, தன் அளவை பாதி திரைக்கு மாற்றிக் கொள்ளும். அதே போல, மேலாக இழுத்தால், விண்டோ பெரிதாகும். கீழாக இழுத்தால், சிறிய அளவில் மாறும்.

பாதி திரையில் வைத்தபடி, நெட்டு வாக்கில் இந்த விண்டோவினை அமைக்கலாம். பாதி திரை அளவில் இருந்தவாறே, நெட்டு வாக்கில் விரியும், குறையும்.இந்த செயல் பாடுகளை கீகள் மூலமும் இயக்கலாம்.

விண்டோஸ் கீயுடன் இடது அம்புக் குறி அல்லது வலது அம்புக் குறியைப் பயன்படுத்தினால், விண்டோ திரையின் பாதி அளவில் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும்.

இதே போல, விண்டோ கீயுடன் மேல் மற்றும் கீழ் அம்புக் குறியினைப் பயன்படுத்தினால், விண்டோ சுருங்கும், விரியும். விண்டோ + ஷிப்ட்+ மேல் அம்புக் குறி கீகளை அழுத்தினால், அல்லது கீழ் அம்புக் குறி கீயை அழுத்தினால், நெட்டு வாக்கில் திரை பாதியாகும் மற்றும் விரியும்.


3. பல மானிட்டர் செயல்பாடு:


ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்துச் செயல்படுத்த, விண்டோஸ் 7 எளிதான வழியைத் தருகிறது. இவற்றை இணைத்த பின்னர், விண்டோ+ஷிப்ட்+இடது அம்புக்குறி கீ / வலது அம்புக் குறி கீ களை அழுத்த, செயல்பாடு ஒவ்வொரு மானிட்டராக மாறிச் செல்லும்.


4.உங்கள் டெஸ்க்டாப்பை உடன் அணுக:

விண்டோஸ் 7 தொகுப்பில் தரப்பட்டுள்ள, மிகத் திறன் கொண்ட ஒரு டூல்,டெஸ்க்டாப் கிடைக்க கொடுக்கப் பட்டுள்ள பட்டன் தான். டாஸ்க்பாரின் வலது மூலையில் கடிகாரத்திற்கு அருகே உள்ள சிறிய செவ்வகக் கட்டத்தில் கிளிக் செய்தால், உடனே டெஸ்க்டாப் திரை காட்டப்படும்.

இதனையே விண்டோ கீ + ஸ்பேஸ் கீ அழுத்தியும் பெறலாம்.


5. சிக்கல் இல்லாத விண்டோ செயல்பாடு:

நம் வாழ்க்கையில் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளில் மூழ்கிச் சிக்கலில் சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் தொகுப்பின் செயல்பாட்டிலும், இதே போல பல புரோகிராம் விண்டோக்களைத் திறந்து வைத்து சிக்கிக் கொள்வோம்.

விண்டோஸ் 7 சிஸ்டம், நீங்கள் இயக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறது. விண்டோ + ஹோம் கீகளை அழுத்த, அனைத்து செயல்படாத விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அதாவது நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைல் உள்ள விண்டோ மட்டுமே திரையில் இருக்கும்.

மற்ற அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அவை அனைத்தும் வேண்டும் என்றால், மீண்டும் விண்டோ கீ + ஹோம் கீ களை அழுத்தினால் போதும்.


6.ஹெல்ப் டெஸ்க்கிற்கு உதவி:


என்னதான் ஹெல்ப் டெஸ்க் உதவி சிஸ்டத்தில் இருந்தாலும், பிரச்னை என்னவென்று நாம் தெளிவாகத் தெரிவித்தால் தான், சிக்கலுக்கான தீர்வினை ஹெல்ப் டெஸ்க் நமக்குத் தர முடியும். சிக்கலின் பின்னணியைக் கம்ப்யூட்டரே பதிந்து தரும் வகையில், விண்டோஸ் 7 “Problem Steps Recorder” என்று ஒரு டூலைத் தந்துள்ளது.

இது ஒரு ஸ்கிரீன் கேப்சர் டூல். இதன் மூலம் பிரச்னை ஏற்பட்ட நிலைகள் ஒவ்வொரு திரைக் காட்சியாகப் பதியப்படுகிறது. இது ஒரு எச்.டி.எம்.எல். பைலாக உருவாக்கப்பட்டு, பின்னர் ஸிப் பைலாக பார்மட் செய்யப்பட்டு, ஹெல்ப் டெஸ்க்கிற்கு அனுப்பப்படுகிறது.

இந்த பதிந்திடும் புரோகிராம் கண்ட்ரோல் பேனலில் கிடைக்கிறது. “Record steps to reproduce a problem” என்ற பிரிவில் இது உள்ளது. அல்லது psr.exe என்ற பைலை இயக்கினால் போதும்.


7.டாஸ்க் பாரில் போல்டர்கள்:

வழக்கமாக, நாம், ஒரு குறிப்பிட்ட போல்டரில் அடிக்கடி பயன்படுத்தும் பைல்களை வைத்திருப்போம். கம்ப்யூட்டரை இயக்கியவுடன், இந்த போல்டருக்குத்தான் அடிக்கடி சென்று, திறந்து அதில் உள்ள பைல்களை டபுள் கிளிக் செய்து இயக்குவோம்.

இவ்வாறு அடிக்கடி திறக்கும் போல்டர்களை, உங்கள் விரல் நுனியில் வைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 உதவுகிறது. அடிக்கடி பயன்படுத்தும் போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் போட்டு வைக்கலாம்.

அங்கே போல்டர் ஐகானாக அது அமர்ந்துவிடும். பின்னர், அதில் கிளிக் செய்து, மிக எளிதாக பைல்களைப் பெறலாம். குயிக் லாஞ்ச் புரோகிராம் போல, இது குயிக் லாஞ்ச் போல்டராகச் செயல்படுகிறது.

Saturday, January 1, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

                   துன்பம் தொலைந்து இன்பம் வந்தால் மனதில் நிம்மதி,ஆனால் இன்பம் போய் துன்பம் வந்தால் மனதில் சஞ்சலம்...

                  2010 என்னும் ஒரு வருடத்தை நாம் கடந்து,2011 என்னும் புத்தாண்டுக்குள் வந்திருக்கிறோம்.ஆனால் சில பேர்க்கு இது இனிய வருடமாக அமையும்.சிலருக்கு இது துன்பமான வருடமாக அமையும்.அனால் துன்பத்தை நினைத்து  துவண்டு போகாமல்.அதை எதிர்த்து நின்று வெற்றியை கண்டடைய எனது வாழ்த்துக்கள்.

                எல்லோரையும் வாழ்த்தும் போது,நமக்கான வாழ்த்து முறையாக நம்மிடம்  வந்து சேரும்.இந்த புத்தாண்டிலே அனைவரையும் வாழ்த்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

               எந்த விதமான துன்பமும்,வருத்தங்களும் இல்லாமல் இந்த ஆண்டு  சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமைய இறைவன் நாமத்தினால் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

Friday, December 31, 2010

மதவாதிகளின் அட்டகாசம் இன்னும் ஓயவில்லை...

                            எத்தனை தலைவர்கள் மாறினாலும்,எத்தனை ஜன்மம் எடுத்தாலும்,மாறாத ஒன்றாக இருக்கிறது இந்த மத பிரச்சனை.மனிதன் மாறுகிறான்,ஆனால் மதவாதிகள் என்னும் மிருகங்கள் மாறாமல் அப்படியே தான் இருக்கிறார்கள்.
                           இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாமியம் என்ற வேறுபாடு இல்லாமல் எப்போது தான் இந்த உலகம் மாறும் என்று எதிர்பார்க்கும் மக்கள்  மத்தியில்,மதவாதிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.
                           கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதியான கொற்றிகோடு என்னும் கிராமத்தில்,C.S.I தேவாலயம் அமைந்துள்ளது.இந்த திருச்சபைக்கு பல கிளை சபைகளும் உண்டு.அதில் ஒன்றான எரிச்சமாமூடுவிளை  ஆலயம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சிறிதாக கட்டி துவங்க பட்டது.நாள் போக்கில் அந்த சபையின் குடும்பத்தினர் அதிகரித்து புதிய ஆலயம்   கட்டுவதற்காக  மேற் கூரையை பிரித்தனர்.
                           அப்போது தான்  பிரச்சனை ஆரம்பித்தது.என்னவென்றால்,வேறு மத தொழுகை இடம் இருப்பதற்கு  அருகாமையில் இன்னொரு மதத்தின் தொழுகை இடத்தை அமைக்க விட மாட்டோம் என்று மதவாதிகள் தங்கள் ஆக்ரோசத்தை வெளிக்காட்டினார்கள்.இதன் விழைவாக போலீஸ் ஸ்டேசனில் வழக்கு தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

                            இப்படியாக பல ஆண்டுகள் பிரச்சனை நடந்து கொண்டிருந்தத வேளையில்,நேற்று முன்தினம் ஆலயம் கட்டுவதற்கான ஆணை கிடைத்தது.இதை அடுத்து சபை உறுப்பினர்கள் ஆலயத்தை கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.அந்த வேளையில் மதவாதிகள் எதிர்ப்பை மீண்டும் வெளிக்காட்டி,ஆலயத்தில் பணி செய்து கொண்டிருந்தவர்களை கற்களால் தாக்கினார்கள்.

                            இதனால் அந்த பகுதியில் பெரிய மத பிரச்சனை கிளம்பியது.சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து கொற்றிகோடு பகுதியில் உள்ள அனைத்து தரத்து கிறிஸ்தவர்களும் ஒருங்கிணைந்து ஆலயத்தை கட்ட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.அதன் பெயரில் மாவட்ட கலெக்டர் வந்து அப்பகுதியை முற்றுகையிட்டார்.

                            இப்படியாக பல போராட்டத்தின் மத்தியில் கலெக்டரிடம் இருந்து ஆலயம் கட்டுவதற்கான ஆணை கிடைத்தது.

                           ஆணை கிடைத்த உடன் அங்கு குவிந்திருந்த  போலீஸ் காரர்களின் பாதுகாப்பில் ஆலயம் கட்டப்பட்டது.

                          ஒரு ஆலயம் கட்டுவதற்கு இவ்வளவு  பிரச்சனையா?இது எனது ஊரில் நடந்த உண்மை.இதே போல் பல  ஊர்களில் மதவாதிகளின் அட்டகாசம் தொடர்கிறது.இவர்களுக்கு ஒரு முடிவு வந்தால் தான்,உலகில் அனைத்து மதத்தினரும் நிம்மதியாக  வாழ முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

Monday, December 13, 2010

துபாய்க்கும் சவுதிக்கும் பிரச்சனை எதனால்?

துபாயின் முக்கிய இடமான ஜுமேரியா கடலின் உள் அமைந்துள்ளது "BURG AL ARAB" ஹோட்டல்.இது பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிலேயர்களால் கட்டப்பட்டது.இது துபாயின் ராஜா ஷேய்க் முஹம்மத் பின் ரஷித் அல் மக்தூம் என்பவரின் சொந்த கட்டிடம்.

                இந்த கட்டிடத்தை தான் துபாய் அரசு மேன்மையாக போற்றி கொண்டு இருந்தது. துபாயில் உள்ள வாகனங்களில் இந்த கட்டிடத்தின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்பது தான்,அரசின் ஆணை.

              இது கடலுக்குள் அமைந்துள்ளதால் அரபு நாடான சவுதியிலிருந்து  பார்க்கும் போது துல்லியமாக தெரிகிறது.ஆனால் அங்கிருந்து பார்க்கும் போது  கிறிஸ்துவ சின்னமான சிலுவையை போல் இந்த கட்டிடம் காட்சி அழிக்கிறது.துபாய் முஸ்லிம் நாடு என்பதால் வேறு மதத்தை சுட்டி காட்டும் இந்த கட்டிடத்தை அகற்றுமாறு சவுதி அரசர் "அப்துல்லா" கேட்டு கொண்டுள்ளார்.

       
             அதற்க்கு  துபாய் அரசர் மறுப்பு தெரிவித்துள்ளார்.ஆகவே துபாயில் உள்ள வாகனங்கள் சவுதி செல்லும் போது அவர்களுடைய வாகனங்களை கொண்டு இடித்தும்,தகராறு செய்தும் வந்தார்கள்.ஏனென்றால்,துபாய் வாகனங்களில் இந்த கட்டிடத்தின் புகைப்படம் இருப்பதினால்.

           இத்தகைய பிரச்சனைகள் கிளம்பிய உடன் இந்த கட்டிடத்தின் புகைப்படத்தை உடனே நீக்குமாறு துபாய் அரசு உத்தரவு பிறப்பித்தது.இருப்பினும் இந்த கட்டிடத்தை அகற்றுவதற்கும்,வேறு இடம் வாங்குவதற்கும்,அதில் வேறு ஹோட்டல் அமைப்பதற்கும் எவ்வளவு செலவு ஆகுமோ எல்லாவற்றையும் தானே ஏற்று கொள்கிறேன் ஆனால் இந்த கட்டிடத்தை அப்புற படுத்துங்கள் என்று,சவுதி அரசர் கேட்க, துபாய் அரசரோ முடியாது என்று ஒரே வார்த்தையில் முடித்துள்ளாராம்.


           இன்னும்  இந்த பிரச்னை ஓயாமல் நடந்து கொண்டு இருக்கிறது.பிரச்சனை சுமூகமாக தீர்ந்தால் அனைவருக்கும் நல்லது.இல்லையென்றால் இதன் காரணமாக மத கலவரம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.


பணி சுமை காரணமாக புதிய பதிவுகள் இடுவதில் தாமதம் ஏற்படுகிறது.இருப்பினும் வாரம் ஒரு பதிவு போடலாம் என ஆசை படுகிறேன்.
துபாயில்  என் பயணம் தொடர உங்களுடைய வாழ்த்துக்கள் அவசியம்...
மறக்காமல் உங்கள் கருத்துகளை எழுதி செல்லுங்கள்...

Tuesday, November 16, 2010

"Drop Down Menu" எவ்வாறு தயார் செய்வது?

"Drop Down Menu" என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் கீழே கொடுக்க பட்டுள்ளது,பாருங்கள்,



எப்படி இந்த மெனுவை தயார் செய்வது என்று பார்க்கலாம்,
கீழே கொடுக்க பட்டுள்ள நிரலை copy செய்து,
Dashboard-->Design-->Page Element-->Add Gadjet-->Html சென்று Paste செய்யவும்.

<select onChange="document.location.href=this.options[this.selectedIndex].value;">
<option value="0" selected>Blog Archive</option>
<option value="Links 1">Text 1</option>
<option value="Links 2">Text 2</option>
</select>
 இதில் சிவப்பு நிறத்தில் இருக்கும் எழுத்துக்களை நீக்கி விட்டு,உங்களுக்கு விருப்பமான பகுதியின் Link-ஐ டைப் செய்யவும்,

இதில் நீல நிறத்தில் இருக்கும் எழுத்துகளை நீக்கி விட்டு,நீங்கள் கொடுக்கும் link-இன் தலைப்பை டைப் செய்யுங்கள்.

எடுத்து காட்டாக,


<select onchange="document.location.href=this.options[this.selectedIndex].value;">
<option value="http://www.jerin.co.in" selected />Home
<option value="http://www.kotticode.com" /> Kotticode
<option value="http://www.luckystar.kotticode.com" />  Luckystar
</select>


என்று கொடுத்தால்,






இவ்வாறு உங்களுடைய மெனு தயார் ஆகும்.

இதிலே மூன்று Link மட்டும் தான் கொடுக்க பட்டுள்ளது.மேலும் Link நீங்கள் வைக்க விரும்பினால்,
</select> என்ற வார்த்தையின் முன்பு,



<option value="Links 3">Text 3</option>


என்று  டைப் செய்து கொள்ளுங்கள்.பின்பு மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்.இப்போது உங்களுக்கு "Drop Down Menu" தயாராகி விடும்.


புடிதிருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்...

Saturday, November 13, 2010

பிளாக்கர் "Required Field Must Not Be Blank" என்ற பிழையை சரி செய்யும் வழி...

                                  நாம் பிளாக்கரில் புதிதாக Widjet சேர்க்கும் போது,அதனுடைய தலைப்பு கொடுக்கவில்லை என்றால் "Required Field Must Not Be Blank" என்ற பிழை  வருகிறது.இந்த பிழை தோன்றுவதன் காரணமாக நமக்கு அந்த widjet- ஐ நம்மால் சேமிக்க முடியாமல் போய் விடுகிறது.

                                   அதனால் நாம் ஏதாவது ஒரு தலைப்பினை கொடுத்து சேமித்து விடுகிறோம்.அந்த பிழையை திருத்துவதற்கான வழியை நாம் கீழே பார்க்கலாம்.
                                   இந்த பிழையை திருத்த ஒரு எழிமையான வழி உள்ளது.எப்படியெனில் ஒரு html கோடிங்கை மட்டும் கொடுத்தால் போதும்.


<!-- -->

தலைப்பில் மேலே கொடுக்க பட்டுள்ள கோடிங்கை கொடுத்தால் போதும்,பின்பு சேமித்து கொள்ளலாம்.இப்போது தலைப்பு இல்லாமல் widjet நாம் சேமித்து கொள்ளலாம்.
          
                    <!-- பின் தொடர்க --> என்று நாம் டைப் செய்தாலும்,பின் தொடர்க என்ற எழுத்துக்கள் தலைப்பில் இடம் பெறாது.

                    நீங்களும் முயற்சித்து பாருங்கள்,நிச்சயமாக பயனுள்ளதாய் அமையும்...

நானா வேலைக்கு போகிறேன்?

                                காலை எழுந்து சாபிட்டு கல்லூரி சென்ற காலம் கடந்து போயிற்று.......படித்து முடித்த உடன் வேலைக்கு செல்ல வேண்டுமென்பது பெற்றோர் விருப்பம்,மட்டுமல்லாமல் அனைவரது விருப்பமும் அது தான்.ஆனால் சொந்த ஊரிலே வேலை பார்க்கும் பாக்கியம் சிலருக்கு தான் கிடைகிறது.
                        
                                  நானும் சென்னை,பெங்களூரு,மும்பை என வெளி ஊர்களிலே வேலை செய்து வந்தேன்.இருப்பினும் மாதம் ஒரு முறை ஊருக்கு வருவது எனக்கு புடித்த ஓன்று.அதையே வாடிக்கையாக கொண்டிருந்தேன்.

                                 அதற்கும் வச்சிட்டாங்கப்பா  ஆப்பு.இப்போது துபாய் நாட்டிலே சென்று வேலை பார்ப்பதற்கு  ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.நல்ல வேலை தான், ஆனால் என்ன செய்வது மாதம் ஒரு முறை ஊருக்கு வர முடியாமல் போய் விடும் என்று நினைக்கும் போது தான் மனதில் வருத்தம் வருகிறது.

                                 "சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா" என்று சொல்லி,ஊரையே சுற்றி வந்த நானா இப்போது  துபாயில் வேலைக்கு செல்கிறேன் என்று நினைக்கும் போது கஷ்டமாக தான் இருக்கிறது.

                                இருப்பினும் வேலைக்கு செல்லாமல் சோம்பேறியாக இருக்கும் சிலருக்கு மத்தியில் நானும் வேலைக்கு செல்கிறேன் என்று நினைக்கும் போது உண்மையாகவே சந்தோசம் தான் என் மனதில்.


                               ஆகவே தோழர்களே,என்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

Monday, November 8, 2010

மொபைலில் ஜி-டாக் வசதிக்கு அருமையான மென்பொருள்...

                           
                                     இப்போது  பலர் ஜி-டாக் மூலம் பேசுவதும்,சாட் செய்வதும் பொழுது  போக்காக கொண்டுள்ளனர்.ஆனால் கணினி  முன்னால் எப்போதும் இருப்பது மிகவும் கடினமான விஷயம் தான்.மொபைலில் இதற்கான மென்பொருளை தரவிறக்கி இப்போது சுலபமாக கூகிள்,யாஹூ,எம் எஸ் என் போன்றவற்றை பயன்படுத்தி மகிழலாம்.

                               mig33,e-buddy   போன்ற மென்பொருள்களை இப்போது பலரும் உபயோகித்து வருகிறார்கள்.இருப்பினும் இந்த மென்பொருள்களை உபயோகிக்கும் போது ஒரு பிரச்னை நம்மால் உணர முடிகிறது என்னவென்றால், மொபைல் மூலம் தான் கூகிள் கணக்கை நிறுவி இருக்கிறோம் என்பதனை எழிதாக சுட்டி காட்டுகிறது.

                               இந்த பிரச்சனையை சரி படுத்தும் முறையில் புதிதாக ஒரு மென்பொருளை உங்களுக்கு தெரிய படுத்துகிறேன்.நம்மில் பலருக்கு இதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன.இருப்பினும் தெரியாத பலரும் நிச்சயமாக இருப்பார்கள்.தெரியாதவர்களுக்கு இந்த பதிவு முக்கியமானதாக அமையும் என நம்புகிறேன்.

                               இந்த மென்பொருளின் பெயர் TALKAUNOUT.இதனை உபயோகிப்பதன் மூலம் நாம் எழிதாக  google,yahoo,msn,கணக்கினை நாம் நிறுவ முடியும்,மட்டுமல்லாமல் நாம் மொபைல் மூலம் தான் இதனை பயன்படுத்துகிறோம் என்பதனை யாராலும் கண்டுபுடிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

                               இதனை தரவிறக்க "இங்கே சொடுக்குங்கள்"

 உபயோகித்து பாருங்கள்,நிச்சயம் இதனை பயன்படுத்துவீர் என நம்புகிறேன்.

Wednesday, August 11, 2010

பதிவர்கள் சந்திப்பு...

அன்பான பதிவுலக தோழர்கள் அனைவரும் சந்திப்பதற்கான  ஓர் அறிய வாயப்பு...

                                   சுரேஷ்குமார் என்னும் பதிவரின் திருமணம் வருகின்ற 19 -ம் தேதி (19-08-2010) அன்று நடக்க உள்ளது.இந்த திருமணமானது முட்டைகாடு C.S.I சபையில் வைத்து நடைபெறும்.முட்டைகாடு என்பது குமரி மாவட்டம்,தக்கலை அருகே உள்ளது.

                                 நம்முடைய பதிவர் குடும்பத்தில் ஒருவரான சுரேஷ் குமார் அவர்களின் திருமணத்தை, பதிவர்களாகிய நாம் தான் சிற்பிக்க வேண்டும்.பதிவர்கள்  வருவதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.தங்குவதற்கான ஏற்பாடும்,இதர வசதிகளும் செய்துள்ளோம்.

                                  அவருடைய திருமணம் முடிந்த பிற்பாடு குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவியில் வைத்து பதிவர்கள் சந்திப்பு நடைபெறும்.

                                 அந்த சந்திப்பில் பதிவுலகில் நண்பர்களாக இருக்கும் நாம் நேரில் நம்முடைய கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம்.

                                 வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்கள் நேரில் வர முடியாத காரணத்தினால் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவிக்கலாம்.

                                 சுரேஷ் குமார் அவர்களின் வலைபகுதியை பார்க்க விருப்பம் உள்ளவர்கள்,இங்கே சொடுக்குங்கள். அவர் ஏற்கனவே அழைப்பிதழை பதிவாக வெளியிட்டுள்ளார்,இந்த பதிவை பார்க்க இங்கே சொடுக்குங்கள்.

                                 மேலும் விவரத்திற்கு +919994796659 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழையுங்கள்.இது என்னுடைய தொலைபேசி எண் தான்.

                                  நானும் அவர் ஊரை சார்ந்த பதிவர் என்பதால் மட்டுமல்ல,என்னுடைய வலைபதிவின் குரு என்ற முறையிலும் தான் இந்த அழைப்பை விடுக்கிறேன்.

ஆகவே வாரீர் புதுமண தம்பதிகளை வாழ்த்தி,பதிவர் சந்திப்பை சிறப்பித்து செல்லுங்கள்...

Monday, August 9, 2010

மொபைலில் பதிவுகளை தமிழில் வாசிக்க...

                                  மொபைலில் பதிவுகளை தமிழில் வாசிக்க வேண்டுமென்றால்,மொபைலில் தமிழ் பான்ட் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.தமிழ் வசதி இல்லாத  மொபைலாக இருந்தாலும்,இப்போது தமிழில் பதிவுகளை வாசிக்கலாம்.

                                  என்னுடைய முந்தைய பதிவில் நாகப்பன் என்ற பதிவுலக நண்பர் மொபைலில் தமிழ் மூலம் எவாறு பதிவுகளை வாசிப்பது என்று பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்...அவருக்கான பதிலை இந்த பதிவில் விளக்க உள்ளேன்...

                                 முதலில் உங்களுடைய மொபைலில் இணைய நண்பனாக இருக்க வேண்டும்.அடுத்த  படியாக ஒபேரா மினி உலாவியை தரவிறக்கி கொள்ளுங்கள்...
ஒபேரா மினி தரவிறக்க உங்களுடைய மொபைலில் இருந்து http://mini.opera.com செல்லுங்கள்...

தரவிறக்கிய உடன்  ஒபேரா மினி அட்ரஸ் பாரில் (address  bar ),

opera:config 

என்று டைப் செய்து ok  பொத்தானை அழுத்துங்கள்.

இப்போது புதிதாக திறக்கும் பக்கத்தில்,

Use bitmap fonts for complex scripts  

என்ற வசதியில் NO   என்று இருந்தால்,YES என்று மாற்றி கொள்ளுங்கள்.
உணகளுடைய மாற்றங்களை சேமித்தும் கொள்ளுங்கள்...

இப்போது உலவியிலிருந்து வெளியேறி மறுபடியும் உள்நுழையுங்கள்...

அவ்வளவு தான் இப்போது உங்களுக்கு விருப்ப பட்ட பதிவுகளை உங்களுடைய மொபைலில் இருந்தே வாசிக்கலாம்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting