Monday, August 9, 2010

மொபைலில் பதிவுகளை தமிழில் வாசிக்க...

                                  மொபைலில் பதிவுகளை தமிழில் வாசிக்க வேண்டுமென்றால்,மொபைலில் தமிழ் பான்ட் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.தமிழ் வசதி இல்லாத  மொபைலாக இருந்தாலும்,இப்போது தமிழில் பதிவுகளை வாசிக்கலாம்.


                                  என்னுடைய முந்தைய பதிவில் நாகப்பன் என்ற பதிவுலக நண்பர் மொபைலில் தமிழ் மூலம் எவாறு பதிவுகளை வாசிப்பது என்று பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்...அவருக்கான பதிலை இந்த பதிவில் விளக்க உள்ளேன்...

                                 முதலில் உங்களுடைய மொபைலில் இணைய நண்பனாக இருக்க வேண்டும்.அடுத்த  படியாக ஒபேரா மினி உலாவியை தரவிறக்கி கொள்ளுங்கள்...
ஒபேரா மினி தரவிறக்க உங்களுடைய மொபைலில் இருந்து http://mini.opera.com செல்லுங்கள்...

தரவிறக்கிய உடன்  ஒபேரா மினி அட்ரஸ் பாரில் (address  bar ),

opera:config 

என்று டைப் செய்து ok  பொத்தானை அழுத்துங்கள்.

இப்போது புதிதாக திறக்கும் பக்கத்தில்,

Use bitmap fonts for complex scripts  

என்ற வசதியில் NO   என்று இருந்தால்,YES என்று மாற்றி கொள்ளுங்கள்.
உணகளுடைய மாற்றங்களை சேமித்தும் கொள்ளுங்கள்...

இப்போது உலவியிலிருந்து வெளியேறி மறுபடியும் உள்நுழையுங்கள்...

அவ்வளவு தான் இப்போது உங்களுக்கு விருப்ப பட்ட பதிவுகளை உங்களுடைய மொபைலில் இருந்தே வாசிக்கலாம்...

7 comments:

Robin said...

Good post!

ஜெரின் said...

@Robinநன்றி உங்களது வருகைக்கும் மறுமொழிக்கும்...

ramalingam said...

தமிழில் எழுத என்ன உள்ளது? தமிழ் ஃபான்ட்கள் டவுன்லோட் பண்ணலாமா?

அப்பாதுரை said...

இது ஆபராவில் மட்டும் தானா? ஆபரா எந்த செல் போன்லயும் நிறுவலாமா? ஐ-போன், ஐபாட் உலாவிகள்ள தமிழைச் சரியா படிக்க எதுனா வழி இருக்கா?
உபயோகமான பதிவுங்க.

ம.தி.சுதா said...

தகவலுக்கு மிக்க நன்றி

அப்பாதுரை said...

many thanks; works beautiful.

Ramesh said...

மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே.. இந்த சிக்கலினாலேயே நான் ஓபரா மினி 4.2 வையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன்.. அதில் இச்சிக்கல் இல்லை.. இப்பொழுதே.. இந்த வெர்சனிலும் இந்த மாற்றங்களைச் செய்துவிடுகிறேன்.. நன்றி..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting