Tuesday, November 10, 2009

சரித்திர நாயகனின் சரித்திரம்.................


கமல்ஹாசன் திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகி விட்டதல்லவா? இந்த 50 ஆண்டுகளில் அவர் நடித்த தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்கள் எத்தனை? வாங்கி பட்டங்கள் என்னென்ன? என்பது உள்ளிட்ட ஒரு பெரும் பட்டியலை பிலிம்நியூஸ் ஆனந்தன் வெளியிட்டுள்ளார். அதன்படி கமல்ஹாசன் இதுவரை 221 படங்களில் நடித்திருக்கிறார். இதில் 114 தமிழ் படங்களும், 17 தெலுங்கு படங்களும், 37 மலையாள படங்களும், 16 இந்தி படங்களும், 3 கன்னட படங்களும், ஒரு வங்காள மொழி படமும் அடங்குகிறது. மேற்குறிப்பிட்ட 188 படங்களும் கமல் ஹீரோவாக நடித்த படங்கள். இது தவிர கவுரவ வேடங்களில் தமிழில் 21 டங்களிலும், மலையாளத்தில் 4 படங்களிலும், தெலுங்கு - கன்னடத்தில் தலா 3 படங்களிலும் நடித்திருக்கிறார். ஆக மொத்தம் 221 (188 + 33) படங்களில் கமல் நடித்திருக்கிறார். கலைமாமணி, பத்மஸ்ரீ, டாக்டர் உள்ளிட்ட பட்டங்களை பெற்றிருக்கும் கமல் வாங்கிய விருதுகளுக்கு அளவே இல்லை..............

கமல் பெற்ற விருதுகளின் எண்ணிக்கையை பற்றி இந்த வலைபகுதியில்......
குறிப்பிடப்பட்டுள்ளது.................

Monday, November 2, 2009

மொபைலில் மென்பொருள் டவுன்லோட் செய்வது எப்படி?



இப்போது மொபைலில் புதுமையான மற்றும் வித்யாஷமான சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண வேண்டுமானால், கிளிக் செய்யுங்கள்.அதில் தேடல் கருவியில் உங்களுடைய மொபைல் மாடல் எண்ணை கொடுத்து தேடுங்கள்.அனைத்து வகையான மொபைலிற்கும்,சாப்ட்வேர் இதில் உள்ளது.


இப்போது நோக்கியா மொபைலிற்கான சாப்ட்வேர் வேறு இணைப்பிலும் கிடைக்கும்.அதனை பார்க்க வேண்டுமானால்,கிளிக் செய்யுங்கள்.


எனக்கு பிடித்தமான இரண்டு வலைபகுதியை உங்களுக்கு அறிமுக படுத்தியுள்ளேன் மேலும் உங்களுக்கு தெரிந்தவற்றை எனக்கு jerinrjn@gmail.com
தெரிய படுத்துங்கள்.

Saturday, September 12, 2009

அலுவலுகத்தில் தூங்குவது எப்படி???????????




பல பல வினோதமான புகை படங்களை நாம் பார்த்திருக்கிறோம்................
ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட ஓன்று.எப்படி என்று கேட்டால்,ஒருவன் அலுவலுகத்தில், உயர் அதிகாரி தன்னை பார்க்காத வண்ணம் எவ்வாறு தூங்க வேண்டும் என்பதை அழகாக காட்ட பட்டுள்ளது.

நான் கூகிள் தேடல் கருவியில் நுழைந்து பார்க்கும் போது இந்த புகை படங்கள் எனக்கு கிடைத்தது.அதில் பல கோணங்களில் படங்கள் போட பட்டிருந்தது,ஆனால் உங்களுக்காக இரண்டு கோணங்களை இதில் இணைத்துள்ளேன்.

நான் கண்டு வியப்படைந்த இந்த புகைப்படத்தினை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
இந்த புகைபடத்தினுடைய கருத்துக்களை எழுதுங்கள்.............

Tuesday, September 1, 2009

இந்தியா அணியில் மீண்டும் டிராவிட்???????

இந்தியா அணி டோனி தலைமையில் மிகவும் சிறப்பாக ஆடி வருவது எல்லோருக்கும் தெரியும்முங்க................ஆனா இப்போ பெரிய குழப்பதை ஏற்படுத்தி இருக்காங்க நம்முடைய இந்திய அணியின் நிர்வாகம்.
என்னவென்று கேட்டால் டிராவிட் மறுபடியும் கழம் இறங்க உள்ளார் என்னும் செய்தி தான்.டோனி ட்வென்டி-ட்வென்டி-இல் மிகவும் கேவலமாக விளையாடி பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தினர் என்பது இன்னொரு புறம் இருக்கட்டும்.

முன்பெல்லாம் டோனி வந்தாலே சிக்ஸர் மழையாகவே இருக்கும்.ஆனால் இப்போது மிகவும் பொறுமையாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்து கொண்டு இருகின்றார்.அவருடைய ஆட்டத்தையே குறை சொல்லும் கூட்டம் பலர் உண்டு.அந்த விளையாட்டின் பிண்ணனியத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை.

சரிங்க இப்போ நான் சொல்ல வந்தது என்னன்னா,டோனிக்கே இந்த நிலம அப்படினா டெஸ்ட் விளையாடுவது போல் ஒரு நாள் போட்டியிலும் விளையாடி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பார்ப்பவர் கண்ணில் ரத்தம் வர வைக்கும் திராவிடின் நிலை தான் என்ன என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன்.ரன் ஏதும் எடுக்காமலே நின்று தினருவர்.இப்படி ஒரு மட்டை அடி வீரர் நம்முடைய இந்திய அணிக்கு தேவையாங்க?????????????????

கன்யாகுமரிக்கு அழகு சேர்க்கும் திருவள்ளுவர் சிலை



"இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈ.டுபடுவதும், திருவள்ளுவரை பற்றி எழுதுவதும் ஒன்றுதான் " என்பதை நானறியாதவனல்லன்.முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு அவருள் இருந்ததை நாம் காண முடிகிறது.
வள்ளுவருக்கு இணையான மேதை இன்று இல்லை என்றும் முன்னர் இருந்ததில்லை என்றும் நாளை தோன்றப் போவதில்லை என்றும் சூளுரைக்கலாம். திருவள்ளுவருக்குப் பெருமை சேர்கிறதோ இல்லையோ பேச்சாளரின் வாய் வீச்சு தொடரும்போது அவர் மெத்தப் படித்த மேதாவி என்பதைச் சபை ஏற்றுக்கொள்ளும்படி ஆகிவிடும்.

அப்படியாக தமிழ் இதயங்களில் பெரும் இடத்தை பிடித்த திருவள்ளுவர் கன்னியாகுமரி-இல கம்பீரமாக காட்சி அழித்து கொண்டு இருகின்றார்.
இந்த வள்ளுவர் சிலையின் மொத உயரம் 133 அடி,ஒரு அதிகாரத்திற்கு ஒரு அடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சிலைக்கான கற்கள் சிறுதாமூர்,பட்டுமளைகுப்பம் மற்றும் அம்பாசமுத்ரம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வர பட்டவை.
திரு வள்ளுவர் சிலைக்கு வரும் பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருகின்றனர்.திருவள்லுவலலுவர் சிலை இருபதினால் தான் கன்னியாகுமரி கடலிற்கு அழகு என்று சொன்னால் மிகை ஆகாது.

Sunday, August 30, 2009

சிரித்து வாழ பழகு....................


மனிதனின் வாழ்கையில் சோகங்கள் வருவதுண்டு,இன்பங்கள் வருவதுண்டு,பல தர பட்ட பிரச்சனைகள் வருவதுண்டு.இப்படி பட்ட பல சூழ்நிலையில் மனிதன் சுழன்று கொண்டு இருக்கின்றான் என்பது தான் உண்மை.ஆனால் இவையனைத்தும் தாண்டி,அனைத்து விசயங்களுக்கும் சிரித்து பழகியவன் தான் வாழ்கையில் சாதிக்க முடியும்.

எதிரியை பார்த்து சிரித்து பார்,அவன் பகையை மறந்து விடுவான்.நண்பனை பார்த்து சிரித்து பார்,அவன் நட்பு மீண்டும் அதிகரிக்கும்.ஆனால் தனிமையில் மட்டும் சிரிக்காதே,உன்னை பைத்தியம் என்றே ஒதுக்கி விடுவார்கள்.

சிரித்து வாழ வேண்டும் என்பதை திரைபடங்களில் கூட பல முறை சுட்டி காட்டி இருக்கிறார்கள்.
Dr.எம்.ஜி.ஆர் அவர்கள் "சிரித்து வாழ வேண்டும்,பிறர் சிரிக்க வாழ்ந்திராதே"என்று பாடிய வரிகள் இதற்கு ஒரு எடுத்துகாட்டு.

சிரிப்பை போல் நல்ல மருந்து உலகில் இது வரை கண்டுபிடிக்கவில்லை என்பதும் உண்மை."வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்"என்ற கூற்றே இதற்க்கு சாட்சி.எப்ப்படி பார்த்தாலும் சிரித்து வாழ்ந்திட வேண்டும்,இல்லை என்றால் சிரிக்க பழக வேண்டும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting