Saturday, April 23, 2011

பிளாக்கர் டெம்ப்லேட்(Template) அழிந்து போனால் திரும்ப பெறுவதற்கான வழிகள்...

               பதிவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல்,தங்களுடைய வலைபகுதியை அழகான டெம்ப்லேட் மூலமாகவும்,விட்ஜெட்கள் மூலமாகவும் அலங்கரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்....

              ஆனால் அவ்வாறு டெம்ப்லேட் மற்றும் விட்ஜெட் சேர்க்கும் போது சில பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டி வருகிறது.சில சமயங்களில் விட்ஜெட் சேர்க்கும் போது நம்முடைய டெம்ப்லேட் அழிந்து(Corrupt) விடுகிறது...

             இந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் நம்மில் பலர் திணறி கொண்டு இருப்போம்...

           அந்த பிரச்சனையை சரி செய்வதற்காக மிகவும் எழிதான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம்.


 1.முதலில் Dashboard--->Design--->Edit HTML செல்ல வேண்டும்.

 2.அதில் Expand Widjet Template என்பதை இம்முறை கிளிக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை...

 3.Ctrl + F என டைப் செய்து கீழே உள்ள நிரலை காப்பி செய்து பேஸ்ட் செய்து கண்டுபுடிக்க வேண்டும்...

 <b:widget id='Blog1' locked='true' title='Blog Posts' type='Blog'/>

 4.இதில் " Blog1" என்று சிவந்த நிறத்தில் குறிக்க பட்ட எழுத்துக்களை மட்டும் மாற்றி  "Blog2" என டைப் செய்ய வேண்டும்.

 5. இப்போது மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்...

                         இப்போது நாம் இழந்த நம்முடைய வலைபகுதி மீண்டும் நமக்கு திரும்ப கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்...

                        நாம் முன்னர் சேமித்து வைத்திருந்த வாக்கு பட்டை மற்றும் இதர விட்ஜெட்கள் அனைத்தும் அழிந்து விடும்.அதனை மீண்டும் நாம் தரவிறக்கி கொள்ளலாம்...

                        நாம் தவறுதலாக எப்போதாவது இதே போல் பிரச்சனையில் சிக்கி கொண்டால் இந்த பதிவு முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறேன்...


                 

6 comments:

தனிமரம் said...

புதியதகவலை எனக்கு அளித்துள்ளீர்கள் நன்றி நண்பரே!

ஆனந்தி.. said...

வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html

இராஜராஜேஸ்வரி said...

useful post.Thank you for sharing.

ஜெறின் said...

@Nesan
உங்கள் வருகைக்கு நன்றி நேசன் அவர்களே....

ஜெறின் said...

@ஆனந்தி..
வலைச்சரத்தில் என்னை அறிமுக படுத்தியடுத்தியதற்கு நன்றி...

உங்களுடைய வலைச்சரம் அறிமுகத்தை படித்தேன் பயனுள்ளதாக இருந்தது.

ஜெறின் said...

@இராஜராஜேஸ்வரி
உங்கள் வருகைக்கும் பின்னூடதிர்க்கும் நன்றி....

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting