Friday, April 22, 2011

நம் பதிவுகளை பேஸ்புக்கில் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது எப்படி?

                                   நம்முடைய பதிவுகளை திரட்டிகளின் மூலம் பலருக்கும் அறிமுகபடுத்துகிறோம்,இப்போது பேஸ்புக் மூலமாகவும் பகிர்ந்து கொள்கிறோம் ஆனால் பேஸ்புக்கில் நாம் ஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.
                                   ஆனால் இப்போது நம்முடைய பதிவுகளை நம்முடைய வலைபகுதியில் பதிவிட்ட உடனே  பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால்,மிகவும் எழிதான முறைகளை கையாண்டால் போதும்.

1.முதலில் நம்முடைய பேஸ்புக் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

2.அதில் நம்முடைய புகைப்படத்தின் கீழ் உள்ள Notes-யை திறந்து கொள்ளுங்கள்.

3.அதில் "WRITE A NOTE" யை கிளிக் செய்யுங்கள்.

4.அந்த பக்கத்தில் ஏதாவது ஒரு வாசகத்தை எழுதி அதை "SAVE DRAFT" -கிளிக் செய்து சேமித்து கொள்ளுங்கள்.
(இந்த வாசகத்தை பின்னர் அழித்து கொள்ளலாம்)

5.வாசகங்களை சேமித்த பின்னர் கீழே "EDIT IMPORT SETTINGS"-யை கிளிக் செய்யுங்கள்.இப்போது நம்முடைய வலைப்பக்கத்தின் முகவரியை கொடுக்க வேண்டிய புதிய பக்கம் திறக்க படும்.

6.அந்த புதிய பக்கத்தில் நம்முடைய வலைப்பக்கத்தின் முகவரியை டைப் செய்து "START IMPORTING" என்பதை கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களுடைய வலைப்பக்கம் பேஸ்புக்குடன் பகிர்வு துவங்கி விடும்.

7.அடுத்த படியாக உறுதிபடுத்துவதற்காக "CONFIRM IMPORT" என்பதனை கிளிக் செய்யுங்கள்.

8.அவ்வளவுதான் இப்போது உங்களுடைய வலைப்பக்கம் பேஸ்புக்குடன் பகிர்ந்து விடும்,நம்முடைய அடுத்த பதிவுகள் நேரடியாக பேஸ்புக்கில் பகிர படும்.

நீங்களும் முயற்சித்து பாருங்கள்....
பயனுள்ளதாக இருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்.... 
 

2 comments:

Anonymous said...

அன்பு தம்பி ஜெரின் உங்கள் வலை பூ
அருமையான பதிவை கொண்டது
எனக்கு உங்கள் பதிவு பயனானது நன்றிகள்
எனது வலை தளம் முகவரி kaleelsms.com
மெயில் முகவரி mkaleel60@gmail.com
பேஸ் புக் முகவரி kaleelsms@gmail.com

Anonymous said...

@kaleelsms.com

நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting