Saturday, November 13, 2010

நானா வேலைக்கு போகிறேன்?

                                காலை எழுந்து சாபிட்டு கல்லூரி சென்ற காலம் கடந்து போயிற்று.......படித்து முடித்த உடன் வேலைக்கு செல்ல வேண்டுமென்பது பெற்றோர் விருப்பம்,மட்டுமல்லாமல் அனைவரது விருப்பமும் அது தான்.ஆனால் சொந்த ஊரிலே வேலை பார்க்கும் பாக்கியம் சிலருக்கு தான் கிடைகிறது.

                        
                                  நானும் சென்னை,பெங்களூரு,மும்பை என வெளி ஊர்களிலே வேலை செய்து வந்தேன்.இருப்பினும் மாதம் ஒரு முறை ஊருக்கு வருவது எனக்கு புடித்த ஓன்று.அதையே வாடிக்கையாக கொண்டிருந்தேன்.

                                 அதற்கும் வச்சிட்டாங்கப்பா  ஆப்பு.இப்போது துபாய் நாட்டிலே சென்று வேலை பார்ப்பதற்கு  ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.நல்ல வேலை தான், ஆனால் என்ன செய்வது மாதம் ஒரு முறை ஊருக்கு வர முடியாமல் போய் விடும் என்று நினைக்கும் போது தான் மனதில் வருத்தம் வருகிறது.

                                 "சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா" என்று சொல்லி,ஊரையே சுற்றி வந்த நானா இப்போது  துபாயில் வேலைக்கு செல்கிறேன் என்று நினைக்கும் போது கஷ்டமாக தான் இருக்கிறது.

                                இருப்பினும் வேலைக்கு செல்லாமல் சோம்பேறியாக இருக்கும் சிலருக்கு மத்தியில் நானும் வேலைக்கு செல்கிறேன் என்று நினைக்கும் போது உண்மையாகவே சந்தோசம் தான் என் மனதில்.


                               ஆகவே தோழர்களே,என்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

6 comments:

Prasanna said...

Best Wishes :)

ஜெரின் said...

@Prasanna
வாழ்த்துக்கு நன்றி....

ம.தி.சுதா said...

சென்று வா சகோதரா வென்று வா.....

ஜெரின் said...

@ம.தி.சுதா
உங்கள் வாழ்த்துக்கள் தான் என் வெற்றி சகோதரா.................

நிச்சயமாக வென்று வருகிறேன்....................

Suresh Kumar said...

நல்ல பையனா வேலைய பார்த்து நல்ல படியா வா ..............வாழ்த்துக்கள்

ஜெரின் said...

@Suresh Kumar
நன்றி அண்ணா.....

உங்கள் வாழ்த்துக்கும்,வருகைக்கும்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting