கருணாநிதியும்,ஜெயலலிதாவும்,இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.இது பற்றி விஜயகாந்த் கூறுகையில்,
இலங்கைப் பிரச்னை குறித்து ஜெயலலிதா தமிழீழம் ஒன்று தான் தீர்வு எனப் பேசி வருகிறார். அவர் இவ்வளவு நாட்கள் இதுகுறித்து மவுனமாக இருந்துவிட்டு தற்போது பேசுவது தேர்தலுக்காக தான். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்தது அங்கு தமிழர்கள் முழுவதும் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இனியும் குண்டு போட்டால் அங்குள்ள சிங்களர்கள் தான் இறந்து போவார்கள். எனவே தான், போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நடத்திய நாடகம் தான். கருணாநிதி அணிந்து வரும் மஞ்சள் துண்டு குரு பகவானைக் குறிக்கும்.
DMDK எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. மக்கள் மற்றும் ஆண்டவனோடு மட்டும் தான் கூட்டணி அமைத்துள்ளோம்....