
விண்டோஸ்
ஓபரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான்
rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும்
அது குறித்து நமக்கு பிழை செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும்
செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த
சந்தேகங்கள் தெளிவாகும்.
...